குஜராத் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக நடைபெற இருக்கும் தேர்தலில் . 87 தொகுதிகளுக்கான முதல் கட்ட தேர்தல் அடுத்த மாதம் 13-ம் தேதி நடைபெறுகிறது . மீதம் இருக்கும் 95 தொகுதிகளுக்கு 17-ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது .
இந்நிலையில், குஜராத் முழுவதும் பாரதிய ஜனதா தேசிய தலைவர்களை வைத்து பிரமாண்ட தேர்தல்பிரசார பேரணிகளை நடத்த பாரதிய ஜனதா திட்டமிடிருக்கிறது.
இந்தபேரணிகளில் பங்கேற்க, பாராளுமன்ற மேல்சபை எதிர்க் கட்சி தலைவர் அருண்ஜெட்லி, பா.ஜனதா முன்னாள் தலைவர் ராஜ்நாத்சிங், வெங்கையா நாயுடு, பாரதிய ஜனதா தேசிய துணைத் தலைவர் புருஷோத்தம் ருபலா, மபி முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான், ஜார்கண்ட் முதவர் அர்ஜுன் முண்டா உள்ளிட்ட பாரதிய ஜனதா தலைவர்கள் குஜராத் வந்துள்ளனர்.
நேற்று 55 இடங்களில் பிரமாண்ட பேரணிகள் நடந்தன . அகமதாபாத்தில் நடந்த பேரணியில் பேசிய பாராளுமன்ற மேல் சபை எதிர்க் கட்சி தலைவர் அருண் ஜெட்லி கூறியதாவது:-
பாஜக.,வை சேர்ந்த ஏராளமான தலைவர்கள் நரேந்தி மோடியை ஆதரித்து குஜராத்தில் பிரசாரம்செய்ய குவிந்தள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த பாரதிய ஜனதாவும் மோடியின் பின்னால் நிற்கிறது என்று
பேசினார்
காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ... |
முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ... |
காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.