மத்தியில் மதவாத ஆட்சி அமையகூடாது என்றே காங்கிரசுக்கு ஆதரவுதெரிவித்தேன் என கூறும் கருணாநிதி கடந்த 1999-ம் ஆண்டு நடந்த பாராளுமன்றதேர்தலில் பாரதிய ஜனதா கொடியுடன் ஓட்டு கேட்டு செல்ல வில்லையா என்று பா.ஜ.க மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது; தமிழகத்தில் 15 லட்சம் ஏக்கரில் பயிரடபட்டுள்ள சம்பாபயிர்கள் கருகும் அபாயம் உள்ளது. எனவே காவிரி விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு கருகும்பயிர்களை காப்பாற்ற தண்ணீர் திறப்பதற்கு உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தமிழக அரசு, கர்நாடக அரசைபோல அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டவேண்டும். வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க பலம்பொருந்திய கட்சியாக உறுவெடுக்கும். தமிழக சட்டசபையில் எதிர்கட்சி தலைவர் பதவிக்கு தனிமரியாதை உண்டு . தேமுதிக. தலைவர் விஜய காந்தை தர குறைவாக நடத்தக் கூடாது. அந்த பதவிக்கு உரிய மரியாதையை தமிழக அரசு வழங்கவேண்டும்.
அந்நிய முதலீடு விவகாரத்தில் திமுக. திடீர்பல்டி அடித்ததன காரணம் என்ன? அதனை தொண்டர் களுக்காவது கருணாநிதி பகிரங்கமாக தெரிவிக்கவேண்டும். இரட்டை நிலைபாடு எடுப்பது அவருக்கு புதிதல்ல.
மத்தியில் மதவாதஆட்சி அமையகூடாது என காங்கிரசுக்கு ஆதரவுதெரிவித்தேன் என்று கூறும் கருணாநிதி 1999-ம் ஆண்டு நடந்த பாராளுமன்றதேர்தலில் பாரதிய ஜனதா கொடியுடன் ஓட்டுகேட்ட செல்ல வில்லையா. காங்கிரஸ் கட்சியின் தூதர் குலாம் நபி ஆசாத்துக்கும், கருணாநிதிக்கும் திரைமறைவில் நடந்தபேரம் என்ன என பகிங்கரமாக தெரிவிக்கவேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.
நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ... |
100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ... |
இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.