குஜராத்தில் மக்கள் தங்கள்மாநிலத்துக்கு சரியான தலைவரைத் (லீடர்களை) தேடுகிறார்கள்; எழுதி வைத்ததைப் படிப்பவர்களை(ரீடர்களை) அல்ல என்று பாஜக தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது , குஜராத்தில் வளர்ச்சிப்பணிகள் எதுவுமே நடைபெறவில்லை, சமூகத்தில் ஏற்றத் தாழ்வு உள்ளது என பேசியதை குறிப்பிட்டு, குஜராத் மக்கள் தங்களுக்கு லீடர்களைத் தேடுகிறார்களே ஒழிய ரீடர்களைத் தேடவில்லை. அதுவும், எப்போதோ எழுதிவைத்ததை வார்த்தை மாறாமல் வாசித்துவிட்டுச் செல்பவர்களை அல்ல; சோனியாவும் மன்மோகனும் அதிகாரத்துக்கு வரவேண்டும் என்பதற்காக பழைய கதைகளை இங்கே வாசித்து விட்டுச் செல்கின்றனர். ஆனால் அவர்கள் கனவு கனவாகவே இருக்கும்” என்றார்.
மேலும், மன்மோகனும் சோனியாவும் குஜராத்தின் வளர்ச்சியைக் கொச்சைப்படுத்திப் பேசி, அதன் பெருமையையும் அதன் வளர்ச்சியையும் குறித்து அவதூறு பரப்புகின்றனர். குஜராத்தை முன்னேற்ற அவர்கள் இதற்காக எந்த ஒரு திட்டத்தையும் ஏன்.. ஒரு சல்லிக்காசுகூட கொடுத்ததில்லை. அப்படி இருப்பவர்கள் இப்படிப் பேசுவது தவறு என்றார்.
டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ... |
விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ... |
ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.