ஓட்டு வங்கிக்காக நீங்கள் அரசியல் நடத்துகிறீர்கள், ஒட்டுமொத்தமாக 6 கோடி மக்களும் குஜராத்தியர்கள்தான் என்று பிரதமர் மீது குஜராத் முதல்வர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
ஒரு பொதுக்கூட்டத்தில் மேலும் அவர் பேசியதாவது , மத்தியில் ஆளும் ஐ.மு.கூட்டணிஅரசு அவதூறு பரப்பிவருகிறது. எனது மாநிலத்தில் சிறுபான்மை யினருக்கு பாதுகாப்பு இல்லை என்று பிரதமர் கூறுவதை ஏற்க முடியாது. வெறும் ஓட்டுவங்கிக்காக இப்படி பேசுவதுசரியல்ல. எனது ஆட்சியில் சிறுபான்மை யினரிடம் என்றைக்குமே பாரபட்சம் காட்டியது இல்லை. ஒட்டுமொத்தமாக 6 கோடி மக்களும் குஜராத்தியர்கள்தான்.
நீங்கள் (பிரதமர் ) அடிப்படையில் ராஜ்ய சபா உறுப்பினராக அசாம்மில் இருந்து தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளீர்கள். கடந்த சிலமாதங்களுக்கு முன்பு நடந்த அசாம் கலவரத்தினை நினைவுகூர்ந்து பாருங்கள். என்ன நடந்தது? எத்தனை உயிர்கள் பலியாயின. இதனை நாடேஅறியும். அங்கே வன்முறை தலை விரித்தாடியது. குஜராத்தில் கடந்த பத்து வருடத்துக்கு முன்பு நடந்த சம்பவத்திற்குபிறகு ஏதேனும் நடந்ததுண்டா? அதனை இப்போது தேர்தல்நேரத்தில் வாய்திறக்கிறீர்கள் என்று பேசினார்.
பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ... |
இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.