உ.பி., முதல்வர் அகிலேஷ்யாதவ் பதவி விலகவேண்டும் என பாரதிய ஜனதா வலியுறுத்தி உள்ளது.
அகிலேஷ்யாதவ் மீது வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்துசேர்த்தது தொடர்பான விசாரணையை தொடர சி.பி.ஐ.,க்கு
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, தார்மீகதின் அடிப்படையில் அவர் முதல்வர் பதவியில் நீடிக்க கூடாது என பாரதிய ஜனதா சுட்டிக்காட்டியுள்ளது.
இதுகுறித்து பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் லட்சுமிகாந்த் வாஜ்பாய் நேற்று கூறியது: அரசியலமைப்பு பதவியிலிருக்கும் ஒருவருக்கு எதிராக பாரபட்சமற்ற விசாரணையை மேற்கொள்ளமுடியாது என்பதால், அகிலேஷ் பதவி விலகவேண்டும்.
முதல்வராக இருந்துகொண்டு, எப்படி அவரால் விசாரணைக்கு ஒத்துழைக்க முடியும்? இது குறித்து சிபிஐ அலுவலகத்துக்கு எப்படி அவரால் செல்லமுடியும்?
ஐ.மு., கூட்டணி அரசு, அகிலேஷுக்கு எதிராக சி.பி.,ஐயை அரசியல் கருவியாக பயன் படுத்துவதை தவிர்க்க நீதிமன்ற கண்காணிப்பு அவசியம்.
பாரதிய ஜனதா தலைவர்களான எல்கே அத்வானி, மதன்லால் குரானா உள்ளிட்டோர் தங்களின் மீது ஹவாலா மோசடிவழக்கு தொடரப்பட்டவுடன் விசாரணைக்கு ஒத்துழைப்பதற்காக தங்கள் பதவியை ராஜிநாமாசெய்ததை, அகிலேஷ் உதாரணமாகக் கொண்டுசெயல்பட வேண்டும் என்றார்.
பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ... |
சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ... |
ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.