தாம் தவறு செய்து இருந்தால் ஆறு கோடி குஜராத்திகளிடமும் மன்னிப்புகேட்கிறேன் என அகமதாபாத்தில் நடந்த வெற்றி விழாவில் முதல்வர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.
வெற்றி விழாவில் மேலும் அவர் பேசியதாவது , குஜராத்தில் புதிய
அத்தியாயம் உருவாக்க பட்டிருக்கிறது. நம் மக்கள் சாதிய அரசியலை நிராகரித்துள்ளனர் . இந்தவெற்றி ஆறு கோடி மக்களின் வெற்றி. இத்தனை ஆண்டு காலம் முதல்வராகயிருந்த தாம் தவறுசெய்திருந்தால் 6 கோடி மக்களிடமும் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.
அடுத்த 5 வருடத்தில் இன்னும் கடுமையாக உழைக்க உள்ளேன் . எது நல்லது என்பது மக்களுக்கு தெரிந்துள்ளது . நல்லாட்சி , பொருளாதார வளர்ச்சிக்காக மக்கள் வாக்களித்துள்ளனர் என்றார் .
வழக்கமாக மோடி மேடையில் தாய் மொழியான குஜராத்தி மொழியில் தான் பேசுவார். ஆனால் இன்றைய கூட்டத்தி ஹிந்தி மொழியில் மோடி பேசி தனது பார்வை தேசியத்தின் பக்கம் திரும்பியுள்ளது என்பதை மறைமுகமாக சுட்டி காட்டியுள்ளார்.
இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ... |
எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.