தில்லியில் மாணவி பாலியல்பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் குறித்து பிரதமர் மன்மோகன்சிங்கும், சோனியா காந்தியும் தொடர்ந்து மௌனமாக இருப்பது ஏன்? என்று பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது : “”போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம், அவர்களது கோரிக்கைகளை பிரதமர் கேட்டிருக்கவேண்டும். அதை விட்டுவிட்டு, அவர்களின் மீது காவல்துறையினர் தடியடி மேற்கொண்டது வருத்தத்துக்குரியது.
இந்தவிவகாரத்தில் நாடே கொந்தளித்து கொண்டிருக்கும்நிலையில், பிரதமரும், சோனியா காந்தியும் எந்த விதமான கருத்தையும் தெரிவிக்காமல் அமைதியாக காப்பது ஏன்?
பொதுமான பாதுகாப்பை தருவோம் என்ற வாக்குறுதியை பிரதமர் தரவேண்டும். இந்த வாக்குறுதியைத் தான் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளம்பெண்களும், ஆண்களும் எதிர்பார்க்கின்றனர். உணர்ச்சி கரமான இந்த போராட்டத்தை காவல்துறை மிக எச்சரிக்கையாகக் கையாளவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். |
Leave a Reply
You must be logged in to post a comment.