பாலியல் பலாத்காரத்துக்கு மரணதண்டனை விதிக்க சட்ட திருத்தம் கொண்டுவருவதற்காக நாடாளுமன்ற சிறப்புகூட்டம் நடத்தவேண்டும் என ஜனாதிபதியிடம் முறையிடுவதற்கு பாரதிய ஜனதா முடிவு செய்துள்ளது. டெல்லி பாலியல்பலாத்கார சம்பவம் குறித்தும் , மேலும் அதைதொடர்ந்து நடந்த போராட்டங்கள் குறித்தும் பாரதிய ஜனதா முன்னணி தலைவர்கள் நேற்று டெல்லியில் ஆலோசனை நடத்தினர்.
கூட்டத்துக்கு பின் மக்களவை எதிர்க் கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது. இதுகுறித்து எதிர்க் கட்சிகளோடும், போராட்ட காரர்களோடும் பேசுவதற்கு அரசு தயக்கம் காட்டுகிறது . போராட்டம் நடத்திய மாணவர்களின் மீது காவல்துறையினர் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி தடியடி நடத்தியது கண்டிக்க தக்கது . 80 மாணவர்கள் இப்போது மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளனர்.
பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிக்கு மரணதண்டனை விதிக்க சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும். இதுதொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடத்தக்கூட அரசு தயாரில்லை. சட்டத் திருத்தத்தை நிறைவேற்ற நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டவேண்டும் என கோரிக்கையை கூட அரசு நிராகரித்து விட்டது. இதனால், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் செவ்வாய் கிழமை சந்தித்து நாடாளுமன்ற சிறப்புகூட்டத்தை நடத்த முறையிடுவோம் என்றார்.
நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ... |
கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ... |
மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.