மத்திய அரசின் பல வீனமான கொள்கைகளாலும் மோசமான தலைமையினாலும் நாட்டின் வளர்ச்சி முடங்கி விட்டது மத்திய அரசின் முடிவுகளால் பலதுறைகள் சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன என்று குஜராத் முதல்வர் நரேந்திரமோடி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவின் வளர்ச்சியை உற்று நோக்கி கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்தில் நாட்டின் தலைமை பொறுப்பில் இருப்பவர்களின் சோர்வு மனப் பான்மையாலும் அலட்சியத்தாலும் நாடு பெரும்பொருளாதார சிக்கலை எதிர் கொண்டுள்ளது.
மொத்த உள் நாட்டு உற்பத்தி இலக்கை 9 சதவீதமாக நிர்ணயித்தால் மட்டும்போதாது; அந்த இலக்கை எட்ட உறுதியான அரசியல்நிலைப்பாடு தேவை.
நாட்டின் மந்தமான வளர்ச்சிக்கு காரணம் கேட்டால் சர்வதேச அளவில் காணப்படும் பொருளாதார மந்தநிலையை மத்திய அரசு காரணம் காட்டுகிறது. அப்படி என்றால் மாநிலங்களின் வளர்ச்சியில் தேக்கநிலை ஏற்பட்டால் யாரை காரணம் காட்டுவது?
மத்திய அரசின் முடிவுகளால் பலதுறைகள் சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. இந்த இக்கட்டான சூழ் நிலையிலும் குஜராத் உள்ளிட்ட சிலமாநிலங்கள் நல்ல வளர்ச்சிப்பாதையில் முன்னேறி வருகின்றன.
நாட்டின் மக்கள்தொகையில் 65 சதவீதத்தினர் இளைஞர்கள் தான்; அவர்களின் ஆற்றலை பயன் படுத்தும் வகையில் வளர்ச்சி திட்டங்களை தீட்டி அதன்மூலம் ஒட்டுமொத்த வளர்ச்சியைப் பெருக்கலாம்.
குஜராத்தை முன் மாதிரியாகக் கொண்டு, அதன்படி மற்ற மாநிலங்களும் வளர்ச்சித்திட்டங்களை வகுக்க திட்டக்கமிஷன் அறிவுறுத்தவேண்டும்.
சீரான சதவீதத்தில் நாட்டின் வளர்ச்சியை உயர்த்த தேசியவள ஆணையம் ஒன்றை உருவாக்கவேண்டும். அதன்மூலம் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஐந்தாண்டுகளுக்கு தேவையான அத்தியாவசியான மானியங்களை உரியசதவீதத்தில் ஒதுக்கீடு செய்யவேண்டும் என்றார் மோடி.
தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ... |
கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ... |
இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.