தகுதியற்றவர்கள் ஆட்சியில் டெல்லி சம்பவம் போன்ற சம்பவங்களை கட்டுப்படுத்த முடியாது

தகுதியற்றவர்கள் ஆட்சியில்   டெல்லி   சம்பவம் போன்ற சம்பவங்களை கட்டுப்படுத்த முடியாது தகுதியற்றவர்கள் ஆட்சியிலிருக்கிற போது எந்த கடுமையான சட்டங்களாலும் டெல்லி சம்பவம் போன்ற சம்பவங்களை கட்டுப்படுத்த முடியாது தொடரவே செய்யும் என்று தமிழ்நாடு பா.ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது ; ஆட்சியில் தகுதியற்ற வர்கள் இருக்கிற போது எந்த கடுமையான சட்டங்கள் வந்தாலும் டெல்லி சம்பவம்போன்ற சம்பவங்கள் தொடரும்.டில்லி மருத்துகல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்டு கொடுரமான முறையில் தாக்கப்பட்டு சிகிச்சை கொடுக்கப்பட்டு பலன் இன்றி மரணம் அடைந்தார்.இம்மாணவியின் மரணம் உலக அளவில் மானுடம் நேசிக்கும் அனைவரின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியது.ஐக்கிய நாட்டு சபை பொதுசெயலாளர் பான்கிமுன் வரை கண்டனம் தெரிவித்துள்ளனர். தற்போது இளைஞர்கள் மத்தியிலும் பெண்கள் மத்தியிலும் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. டில்லியில் மக்கள் போராட்டம் நடத்தினர் .சாத்வீகமுறையில் நடத்திய போராட்டத்தை மத்தியஅரசால் தாங்கமுடியாத நிலையில் தோற்கடிக்க பலமுயற்சி நடந்தது.

தற்போது இந்த பழியில் இருந்து விடுபடமுயற்சியில் இறங்கியுள்ளது. அதற்காக தனி சட்டம் இயற்றப்பட வேண்டும் என கூறுகிறது. ஆனால் எத்தனை சட்டம் இயற்றினாலும் ஏட்டில் தான் இருக்குமே தவிர எந்த பலனும் இல்லை. இதனை நாடு கண்டுகொண்டுள்ளது. தினமும் பாலியல் பலத்காரம், கொலைகள் சர்வசாதாரணமாக நடந்து வருகிறது.

மேற்கு வங்க மாநில முதல்வர் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இந்த அரசால் எத்தனை சட்டம் கொண்டு வந்தாலும் அதனை தடுக்க முடியாது. சட்டத்தை முறையாக பயன்படுத்தி நடவடிக்கை எடுப்பார்கள் என நம்பிக்கை இல்லை.
குஜராத் மாநிலத்தில் மோடி பதவி ஏற்கும் முன் ஊரடங்கு பல காலங்களில் அமல் படுத்தப்பட்டது. ஆனால் அவர் பதவியேற்றது முதல் இன்று வரை ஊரடங்கு எந்த பகுதியிலும் இல்லை. கலவரங்கள் இல்லை. ஊரடங்கு என்ற பேச்சுக்கு இடமில்லை. உலகநாடுகள் இந்திவை ஏளனமாக பார்க்கிறது. சிறு நாடான இலங்கை கூட இந்தியா நாட்டைமதிக்கவில்லை. தினமும் மீனவர்களை துன்புறுத்தி வரும் இலங்கையை தடுக்க முடியவில்லை. அமைச்சரவையில் முடிவெடுக்கமுடியவில்லை. 9 ஆண்டுகளாக இதே நிலையில் பிரதமர் உள்ளார். 1000 கோடி இலங்கைக்கு கொடுக்கப்பட்டது. இது முறையாக வழங்கவில்லை இதனை கேட்க நாதியில்லை. இந்த நிலையில் புதிய சட்டம் கொண்டு வந்தாலும் பலன் இல்லை. மக்கள் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டுமெனில் சட்டத்தை மதித்து துணிச்சலாக முடிவெடுக்கும் மத்திய அரசு தேவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழகத்திலும் கற்பழிப்பு சம்பவங்கள் நடக்கிறது. தமிழகத்தில் நிலை நாளுக்குநாள் மோசமாக சென்று கொண்டு இருக்கிறது. அனைத்து மக்களும் சமமாக பாவிக்கப்பட வேண்டும். மேல், கீழ் சாதி என பிரித்து அனைவரும் சமம் என கருதும் நிலை வரவேண்டும்.
தர்மபுரியில் நடந்த சம்பவம் திட்டமிட்ட மிகபெரிய கலவரம். பின்னணியில் யார் உள்ளனர் என்பதை தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்,

வரும் பிப்., மார்ச்சில் சமுதாயத்தில் நல்லிணக்கம் ஏற்படுத்தும் விதமாக பாதை யாத்திரை நடத்த உள்ளோம். காவிரி சம்பந்தமான அனைத்து முடிவுகளையும் கெஜட்டில் வெளியிடவேண்டும். காவிரி, முல்லை பெரியாறு பிரச்சனையில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டுள்ளளது.

தமிழகத்தில் யாருடனும் கூட்டணி வைக்க காங் தயாராக உள்ளது. தமிழர்களை கொன்று குவித்து வரும் வேளையில் 2009ல் தி.மு.க., வுடன் கூட்டணி வைத்தது. மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரம் தமிழகத்திற்கு தரமாட்டோம் என கூறுவர். ஆனால் தமிழகத்தில் கூட்டணி அமைப்பர். மாற்றந்தாய் மனபோக்குடன் மத்திய அரசு நடந்து கொள்கிறது.
மீனவர்கள் மீது நடத்தபடும் தாக்குதலை கண்டித்து பா,ஜ., போராட்டம் நடத்தும்.

இவ்வாறு பொன்ராதாகிருஷ்ணன் கூறினார்.
நகராட்சி சேர்மன் மீனாதேவ், கோட்ட இணை பொறுப்பாளர் வேல்பாண்டியன், மாவட்ட செயலாளர் தேவ், பொருளாளர் முத்துராமன், நகர தலைவர் ராகவன், முன்னாள் நகர தலைவர்ராஜன், மாவட்ட பிரதிநிதி அஜித்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

அருகன்புல்லின் மருத்துவ குணம்

அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ...

நீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்

உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ...

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...