தொலைக் காட்சிகளில் பாரதிய ஜனதா குறித்த செய்திகளை பார்ப்பதற்கு மக்கள் அதிகமாக ஆர்வம் காட்டுகின்றனர் என பாஜக செய்தி தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் கருத்து தெரிவித்துள்ளார். பெங்களூரில் நேற்று கர்நாடக பாஜக சார்பில் செய்திதொடர்பு கருத்தரங்கம் நடைபெற்றது. தேசிய செய்திதொடர்பாளர் நிர்மலா சீத்தா ராமன் பங்கேற்று பேசியதாவது:
தொலைகாட்சிகளில் பாஜக செய்திகுறித்து பார்ப்பதற்கே பார்வையாளர்கள் அதிகம் உள்ளனர். பாஜக.வுக்கு நல்லது , கெட்டது எது நடந்தாலும் ஊடகங்கள் முக்கியசெய்தியாக வெளியிடுகின்றன. மக்கள் பாஜக மீது அதிக அன்பு வைத்திருப்பதல் ஊடகங்கல் காட்டுவதை மக்கள் தொடர்ந்து பார்க்கிறார்கள். பாஜக அதிகாரத்தில் இருந்தாலும், இல்லா விட்டாலும் அந்த கட்சியின் நடவடிக்கைகளை மக்கள் உன்னிப்பாக கவனிக் கிறார்கள்.
தொலைக் காட்சிகளின் ‘டி.ஆர்.பி ரேட்டிங்’கை பாஜக.,தான் அதிகரிக்க வைக்கிறது. பாஜக குறித்த நல்லசெய்திகளை 30 சதவீத பேரும் . சற்று எதிர்ப்புசெய்தியாக இருந்தால் 50 சதவீதம் பேரும் . அதுவே பா.ஜ.க.,வுக்கு எதிரான கடும்செய்திகளாக இருந்தால் 100 சதவீதம் பேரும் பார்க்கிறார்கள். இதற்காக மீடியாக்களின் மீது வருத்தப் படுவதை விட எச்சரிக்கையாக இருப்பது அவசியம். என்று நிர்மலா சீத்தா ராமன் பேசினார்.
உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ... |
நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ... |
கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.