இந்திய ராணுவவீரர்கள் “தலை கொய்து” படுகொலை…

இந்திய ராணுவவீரர்கள் “தலை கொய்து” படுகொலை… இந்திய –பாகிஸ்தான் எல்லைக்கோட்டருகில், காஷ்மீரின் "பூஞ்ச்" பகுதியில், கடந்தவாரம் பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைக்குள் புகுந்து, இரண்டு இந்திய ஜவான்களை சுட்டுத்தள்ளி, தலையை கொய்துக்கொண்டு போயிருக்கிறது.

இது ராணுவத்தில் அடிக்கடி நடக்கும் செய்கைதானே..இதிலென்ன புதிது இருக்கிறது? என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

நமது எல்லைக்குள் புகுந்து, நமது வீரர்களைக்கொன்று, அவர்களின் தலையைக் கொய்து, உடலை சின்னாபின்னமாக சிதைத்து, சென்றுள்ளது பாகிஸ்தான் ராணுவம்..

கொல்லப்படுவது ராணுவத்தில் சகஜம்..

கொடூரக்கொலைகள் பாகிஸ்தானுக்கு சகஜம்..

எதிர்ப்புதெரிவிக்கக் கூட தயங்குவது இந்தியாவுக்கு சகஜம்..

"மானங்காக்க போராடு" வது பா.ஜ.க.வுக்கு சகஜம்..

இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது இந்திய மக்களுக்கு சகஜமாக இருக்கக்கூடாது…

உலகின் மிகப்பெரிய ராணுவங்களில் ஒன்று இந்திய ராணுவம்..15 நிமிடம் இந்தியப்பிரதமரும்—ராணுவ மந்திரியும் கண்ணை மூடிக்கொண்டால், பாகிஸ்தானையும், பங்களாதேஷையும், பர்மாவையும், ஸ்ரீலங்காவையும், நேபாளத்தையும், பூடானையும், சுற்றிவளைத்து இந்தியாவோடு சேர்த்துவிடும் வல்லமை இந்திய ராணுவத்திற்கு உண்டு.

சர்வதேச விதிமுறைகளை மீறி..பாகிஸ்தான் செய்வது இது முதல் முறையல்ல..பாகிஸ்தான்மீது நடவடிக்கை எடுக்கக்கோருவது ஒருபுறம் இருந்தாலும், இந்தியாவின் மீது தவறு இருப்பதுபோல், எழுதியுள்ள "தி இந்து" பத்திரிக்கைமீதும், அதன் ரிப்போர்ட்டர் "ப்ரவீண் சாமி" மீதும் சட்டப்படி மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும..

டெல்லி மாணவிமீது பாலியல்வன்கொடுமை "நிகழ்த்தப்பட்டத்தற்கு மாபெரும் எதிர்ப்பு தெரிவித்த நாம் , பாகிஸ்தானின் இக்கொடூரத்திற்கு நாடு முழுதும் மிகப்பெரிய ஆர்பாட்டங்கள், போராட்டங்கள், நடத்தி  கடும் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்..

கோவையில் நேற்று நாங்கள் "மெழூகுவர்த்தி அஞ்சலியும்—கண்டனமும் " தெரிவித்து போராட்டம் நடத்தியுள்ளோம்..

நன்றி; எஸ்.ஆர்.சேகர் பாஜக அகில இந்திய வர்த்தகர் அணி செயலாளர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...