மின்சாரத்தை அறவே நீக்கி விட்டால் சங்க காலத்தில் வாழ்ந்துவிடலாம்

மின்சாரத்தை அறவே நீக்கி விட்டால் சங்க காலத்தில் வாழ்ந்துவிடலாம்  சென்ற ஒரு மாத காலமாக பெரும் பாலும் மதுரையிலும் மற்றும் தென் திருப்பேரை கிராமத்திலும் தங்கியிருந்தேன். சென்னைக்குத் தெற்கே தாம்பரத்துக்குக் கீழேயுள்ள பிரதேசங்களை இருண்ட பிரதேசங்கள் என்று தாராளமாக அழைக்கலாம். ஒரு நாளில் கிட்டத்தட்ட 18 முதல் 20 மணி நேரங்களுக்கு மின்வெட்டு நிலவுகிறது.

இருளில் ஒட்டு மொத்த சென்னை தவிர்த்த தமிழ் நாடுமே மிதக்கின்றது. சென்னைவாசிகளுக்கு இரண்டு மணி நேர மின் வெட்டு மட்டுமே அமுல் படுத்தப் படுகிறது. அந்த 2 மணி நேரத்திற்கே அவர்கள் பெரிதாக அங்கலாய்த்துக் கொள்கிறார்கள் அவர்களுக்கு தாம்பரத்துக்குக் கீழே ஒரு மாநிலத்தின் பெரும் பகுதி இருளில் மூழ்கியுள்ள விபரமே தெரிவதில்லை தெரிந்து கொள்ள விரும்புவதும் இல்லை.

எந்தவித அறிவிப்பும் இன்றி நினைத்த நேரங்களில் எல்லாம் கரண்ட் போய் விடுகிறது. காலையில் 5 மணிக்கு முன்னால் எழுந்தால் மட்டுமே டிஃபனுக்காக ஏதேனும் செய்து கொள்ள முடிகிறது. 6 மணி முதல் கரெண்ட் போய் விடுகிறது. பின்னர் 10 மணிக்கு தோன்றி 11 மணிக்கு மறைந்து விடுகிறது. ஓரளவுக்கு வசதியுள்ளோர் வீடுகளில் இன்வெர்ட்டர் என்ற சாதனத்தை நிறுவியுள்ளார்கள். ஆனால் அதன் பேட்டரி சார்ஜ் ஆகும் நேரத்துக்குக் கூட கரெண்ட் வருவதில்லை. ஆதலால் இன்வெர்ட்டர்கள் கரெண்டு போன சிறிது நேரத்திலேயே ஓ வென அலறிக் கொண்டு சுருண்டு விடுகின்றன. ஃப்ரிட்ஜில் வைக்கப் படும் உணவுப் பொருட்கள் அழுகி விடுகின்றன. டிசம்பர் மாதத்திலும் கூட கோடை ஓயவில்லை. 90 டிகிரிக்கு மேல் வெப்பம் நிலவுகிறது. கோடை காலத்தில் 110 டிகிரி வெப்பத்தில் மின்சாரமும் இல்லாமல் மக்கள் வெந்து அவிந்து தவிக்கிறார்கள்.

மாலை நேரங்களில் மின்சாரம் இருப்பதில்லை, கொசுக்கள் கரும் மேகங்கள் போல அடர்ந்து வந்து தாக்குகின்றன. காலை நேரங்களிலும் கொசுக்கள் கூட்டமாக வந்து உறிஞ்சுகின்றன. டெங்கு,சிக்குன்குனியா போன்ற நோய்கள் பரப்பப் படுகின்றன பாதுகாத்துக் கொள்ள மின்சார விசிறிகள் கிடையாது. மாலை நேரம் தொடங்கி சின்ன சின்ன டார்ச் லைட்டுகள் மற்றும் மெழுகு வர்த்திகளுடன் மக்கள் இருண்ட இரவுகளை எதிர்கொள்ளத் தயார் ஆகி விடுகிறார்கள். கடைகள், தெருக்கள், அலுவலகங்கள் அனைத்தும் இருளிலோ மங்கிய வெளிச்சத்திலோ இயங்குகின்றன. ஒட்டு மொத்த மாநிலமுமே இருண்டு செயலற்றுப் போகின்றது. பொது மக்கள் அதிகம் புழங்கும் இடங்களான பஸ்ஸ்டாண்ட் போன்ற இடங்களும் கூட கடும் இருளில் மூழ்கியுள்ளன. வெக்கையிலும், புழுக்கத்திலும், கொசுக்கடியிலும் மக்கள் சொல்லொணா வேதனை  மின்சாரத்தை அறவே நீக்கி விட்டால் சங்க காலத்தில் வாழ்ந்துவிடலாம் அடைகிறார்கள். இருந்தாலும் கூட அதை இயல்பான வாழ்க்கையாக ஏற்றுக் கொண்டு வாழ்க்கையை ஓட்டுகிறார்கள்.

இந்த இருள் வாழ்க்கையில் சில நன்மைகளும் நிகழ்கின்றன. முக்கியமாக மக்களின் மூளைகளை நாசமாக்கும் சீரியல்களை மக்கள் பார்க்க முடியாமல் போவது ஒரு இந்த மின்வெட்டால் நிகழ்ந்த ஒரு நல்ல விஷயமாகும். சற்று கொசுக்கள் ஓய்ந்தவுடன் வீட்டுத் திண்ணையிலோ வெளியிலோ அமர்ந்து கதை பேசுகிறார்கள். குடும்பத்தாருடன் அளவளாவுகிறார்கள். இருண்ட நகரங்களிலும் கிராமங்களிலும் அது வரைக் காணக் கிட்டியிராத நட்சத்திரம் நிறைந்த வானங்களை இரவு நேரங்களில் தெளிவாகக் காண முடிகிறது. மின்சாரம் இல்லாத இருண்ட இரவுகளில் மொட்டை மாடியில் பனை நார்க் கட்டிலில் படுத்துக் கொண்டு நட்சத்திரங்களை எண்ணியது இந்த பயணத்தின் நான் போற்றிய தருணங்களாக இருந்தது. இந்த மின்சார வெட்டு மட்டும் இல்லாமல் போயிருந்தால் நட்சத்திரங்கள் மின்னிய அந்த இனிய இரவுகளை அனுபவித்திருக்கவே முடியாது. அந்த தருணங்களை அளித்த மின்சார வெட்டுக்கு எனது வந்தனங்கள்.

கரண்டு வந்தவுடன் மக்கள் தங்கள் கவலையெல்லாம் மறந்து வாயெல்லாம் பல்லாக மிகுந்த சந்தோஷத்துடன் அப்பாடா கரெண்ட் வந்து விட்டது என்று மகிழ்ச்சி அடைகிறார்கள். அந்த அற்ப மகிழ்ச்சி சில நிமிடஙகளோ மணி நேரங்களோதான் நீடிக்கின்றது. மீண்டும் கரண்டு போய் வந்தவுடன் மீண்டும் அகமகிழ்கிறார்கள். இப்படி தமிழ் நாட்டு மக்களை இந்த கரெண்ட் கட் அடிக்கடி சந்தோஷமடைய வைக்கிறது. இருண்ட இரவுகளில் செயற்கை வெளிச்சமில்லாமல் எண்ணெய் விளக்குகளின் ஒளியில் கோவில்களில் சிற்பங்களையும் ஆண்டவனையும் தரிசிக்க முடிவது மற்றுமொரு அற்புதமான பக்க விளைவாகும். கரெண்ட் கட் ஆனவுடன் பிள்ளைகள் பெரு மகிழ்ச்சியுடன் வீதியில் இறங்கி ஆடிப் பாடுகிறார்கள்.

ஒரு வேளை ஒட்டு மொத்த தமிழ் நாட்டில் இருந்தும் மின்சாரத்தை அறவே நீக்கி விட்டால் மக்கள் சங்க காலத்தில் வாழ்ந்து விடுவார்கள். அந்த நல்ல விஷயம் சென்னையிலும் சீக்கிரமே நடந்தால் நன்றாக இருக்கும். தமிழ் நாட்டு மக்களுக்கு இனி எந்தவொரு கொடுமையுமே பெரிதாகத் தெரியாது. எல்லாவற்றையும் சாதாரணமாக எடுத்துக் கொண்டு வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு போகிறார்கள். உலகத்தின் மிகவும் சகிப்புத்தன்மையுடைய மக்கள் தமிழ் நாட்டு மக்களாகத்தான் இருப்பார்கள். இனி வருங்காலத்தில் என்றாவது மீண்டும் மின்சாரம் திரும்பி வருமானால் இந்த இருண்ட காலத்தை நினைத்து அவர்கள் நிச்சயமாக ஏங்கக் கூடச் செய்வார்கள்

நன்றி ; திருமலைராஜன் சடகோபன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குழந்தை திருமணம் இல்லாத இந்திய ...

குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் அன்னபூர்ணா தேவி இன்று பால் விவாகம் முகத் பாரத் தேசிய இயக்கத்தை தொடங்கி வைக்கிறார் குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் மத்திய ...

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித ...

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித்ஷா விருது வழங்கினார் டில்லியில் சர்வதேச கூட்டுறவு ஆண்டு விழா நேற்று நடந்தது. ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட் ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு எனது  கடமைகளை செய்கிறேன் – பிரதமர் மோடி '' யாருடைய அதிகார வரம்பையும் மீறாமல், அரசியலமைப்பு சட்டத்திற்கு ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்க ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன 'நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன' என மக்களவை ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவ ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவில்லை எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றத்தின் இருஅவைகளும் நேற்று ஒத்திவைக்கப் பட்டன. ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல் நாடகத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு – அண்ணாமலை அரசியலில் தி.மு.க.,வின் இரட்டை வேடத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் ...

மருத்துவ செய்திகள்

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...

ஜீரண சக்தி பெற

அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ...

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...