பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி மிக, மிக மோசமாக இருப்பதாகவும். நரேந்திரமோடி தலைமையில் பாஜக. தேர்தலை சந்தித்தால், பாஜக.,வுக்கே வாக்களிப்போம் என 48 சதவீதம பேர் . கருத்து தெரிவித்திருப்பது ஏ.பி.பி நியூஸ்-நீல்சன் நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.
பிரபல ஏ.பி.பி நியூஸ்-நீல்சன் நிறுவனத்தின் சார்பில் யார் சிறந்தபிரதமராகலாம் என்றும் , அடுத்த பிரமதராகும் தகுதி குறித்தும் ஓர்ஆய்வு நடத்தப்பட்டது. இந்த கருத்த கணிப்பு இந்தியாவின் 28 நகரங்களில் சுமார் 10 ஆயிரம்பேரிடம் நடத்தப்பட்டது .
முதல்தகவலாக பாஜக. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றிபெறும் என தெரியவந்துள்ளது. அந்த கூட்டணிக்கு 39 சதவீதம் பேர் ஆதரவ தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் பாஜக.வின் வளர்ச்சி அபரிதமாக இருப்பதாகவும் கருத்துகணிப்பில் தெரியவந்துள்ளது.
பாஜக. மூத்த தலைவர்களில் பிரதமர் பதவிக்கு மிக் தகுதியானவர் யார் என்ற கருத்து கணிப்பில் 48 சதவீதத்தினர் குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்
மோடிக்கு பிறகு அத்வானி, சுஷ்மா சுவராஜ் இடமபிடித்துள்ளனர். நாடாளுமன்றத்துக்கு தற்போது தேர்தலநடந்தால் காங்கிரஸ் தலைமையிலானகூட்டணி தோல்வியை சந்திக்கும் என்பதை இந்த கருத்து கணிப்பு கூறியுள்ளது.
காங்கிரசில் பிரதமரபதவிக்கு பொருத்தமானவராக 39 சதவீதம் பேர் ராகுலகாந்திக்கு ஆதரவு தெரிவித்தனர். மன்மோகன் சிங்குக்கு 16 சதவீதம் பேர் ஆதரவுதெரிவித்துள்ளனர்.
பிரதமர் மன்மோகனசிங் தலைமையிலான ஆட்சி மிகமிக மோசமாக இருப்பதாக் 36 சதவீத் பேரும், ஆட்சயே சரி இல்லை என்று 17 சதவீதம பேரும் கருத்துதெரிவித்துள்ளனர்.
மேலும் நரேந்திரமோடி தலைமையில் பாஜக. தேர்தலை சந்தித்தால், பாஜக.,வுக்கே வாக்களிப்போம் என 48 சதவீதம பேர் . கருத்து தெரிவித்திருப்பது கருத்துக்கணிப்பின் முக்கிய திருப்பமாகும்.
அதேபோல ராகுல் தலைமையில் காங்கிரஸ் தேர்தல்களத்திற்கு வந்தால் அவர்களுக்கு 18 சதவீதத்தினரே வாக்களிப்போம் என்றும் கூறியுள்ளனர்
நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.