சிபிஐ அமைப்பு நேர்மையாக செயல்படாததால் தான் மத்திய அரசு தப்பி பிழைத்துக் கொண்டிருக்கிறது என மாநிலங்களவை எதிர்க் கட்சித் தலைவர் அருண்ஜேட்லி குற்றம் சாட்டினார்.
இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது;
மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு., கூட்டணி அரசு (யுபிஏ) தொடர்ந்து பதவியில் நீடிக்கிறது என்றால் அதற்க்கு புலனாய்வு அமைப்பான சிபிஐ-யின் நேர்மையற்ற செயல்பாடுகள் தான் காரணம். நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு முறையும் வாக்கெடுப்பு நடைபெறும் போதும் அதை சிபிஐ வெகுநேர்த்தியாக அரசுக்கு சாதகமாக மாற்றிவிடுகிறது.
பகுஜன் சமாஜ் , சமாஜவாதி போன்ற கட்சிகள் நேரத்திற்க்கு ஏற்ப தங்களது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும்படி சி.பி.ஐ செய்துவிடுகிறது.
அரசின் பிடியில் இருந்து சி.பி.ஐ-யை பகுதியளவாவது விடுவிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற தேர்வுக்குழு பரிந்துரைத்துள்ளது. லோக்பால் மசோதா நிறைவேற்றுவதில் பெருமளவுசர்ச்சை ஏற்படக்காரணமே அரசின் பிடியிலிருந்து சி.பி.ஐ-யை எந்த விதம் விடுவிப்பது என்பதில் தான் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ... |
முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ... |
தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.