அன்புடைய கமல் அவர்களே, நீங்கள் இதை படிக்கப் போவதில்லை என்று தெரியும், ஆனால் படிக்கக்கூடும் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன், நம்பிக்கை அல்லவா வாழ்க்கை ?
நீங்கள் உங்கள் திரைப்படங்களில் தொடர்ந்து ஹிந்து தர்மத்தை கேவலப்படுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தீர்கள், நாங்களும் அதை சகித்துக் கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தோம்.
உங்கள் திரைப்படங்களில் பல சமயங்களில் நாத்திக வசணங்களை புகுத்துவீர்கள், நாங்களும் பெரிய உள்ளத்தோடு சகித்தோம்.
சைவர்களும், வைணவர்களும் மதம் பிடித்து போர் செய்துக் கொண்டார்கள் என்ற நீங்கள் உங்கள் கட்டை குரலில் விமர்சித்து ஒரு உண்மையை உரைப்பது போல் நீங்கள் மிகைப்படுத்தி காட்டிய காட்சிகளையும் நாங்கள் கண்டு கொள்ளவில்லை. "தவறு தானே, தவறுகளை கலைந்து முன்னேறுவது தானே பாரதப் பண்பாடு" என்று எடுத்துக் கொண்டோம். அது தவிற உங்களைதான் நீங்கள் "உண்மை விளிம்பி" என்று வேறு முன்நிறுத்தி உள்ளீரே ?
உங்களை நீங்கள் ஒரு திராவிட சிந்தனைவாதி என்பது போல் அடிக்கடி அடையாளம் காட்டி கொள்வீர்கள், உங்கள் கலை கூத்தில் மயங்கியிருந்த நாங்களும் அதை பெரிது படுத்தவில்லை.
ஹிந்துக்களின் பெரு தெய்வம் சிறு தெய்வம் என வழிப்பாட்டு முறைகளை குறித்தும் நீங்கள் விமர்சித்து, ஹிந்துக்களின் இறையான்மையில் விளையாடி, உங்கள் அறிவுஜீவி முகத்தை எங்களுக்கு அடையாளம் காட்டினீர்கள், நாங்கள் அதை அறிவு ஜீவியின் பேச்சு என்று ஆராதித்தோம்.
உங்களின் திரைப்படங்களில் அதிகமாய் முத்தகாட்சிகள், உங்களின் உள்ளாடை காட்சிகள் மற்றும் ஹிந்துக்களை ஏதாவது ஒரு விதத்தில் நையாண்டி செய்யும் விதத்தில் ஒரு காட்சியை கட்டாயம் பார்க்கலாம். நாங்களும் அதை சகித்துக் கொண்டே வந்தோம். ஏனேனில் என்றாவது உங்களுக்கு இறைவன் புரிய வைப்பான் என்ற ஒரு நம்பிக்கை இருந்தது.
இன்று நீங்கள் அதை வெளிக்காட்டி கொள்ளவில்லை என்றாலும் உள்ளார்ந்து புரிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். அறிவுஜீவிகள்தான் தங்கள் தவறுகளை புரிந்து கொண்டாலும் வெளிக்காட்டி கொள்வதில்லையே !!
இத்தனை நாளாக நீங்கள் எட்டி உதைத்தது "தாயை", அது குழந்தைதானே என்று சகித்துக் கொண்டது. இப்போது நீங்கள் தொட்டுப் பார்த்தது "பேயை", அது விடுமா உங்களை ?
ஆனால் இன்று அவர்கள் உங்களுக்கு கொடுத்த சவுக்கடி நல்லதுதான்.
"கறை" நல்லது என்று ஒரு விளம்பரம் வரும் அது போல சில சமயங்களின் வலியும் நல்லதே, பல உண்மைகளை அவை புரிய வைக்கும்.
அமைதியாய் யோசித்து பாருங்கள் உலக மகா கலைஞனே !!
நன்றி Enlightened Master
மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ... |
இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ... |
கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.