மும்பை தாக்குதல் சதிதிட்டத்தை வகுத்த லஷ்கர் தீவிரவாத இயக்கத்தலைவன் ஹபீஸ் சயீதுடன் ஒரேமேடையில் பேசிய காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின்மாலிக் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என மத்திய அரசை பாஜக வலியுறுத்தியுள்ளது.
தூக்கில் போடப்பட்ட அப்சல்குருவுக்கு இரங்கல் தெரிவித்து பாகிஸ்தானில் நடந்த கூட்டத்தில் யாசின்மாலிக் கலந்துகொண்டனர்.
அந்தமேடையில் மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவ சதித் திட்டத்தை வகுத்த லஷ்கர் இ தய்பா தீவிரவாத இயக்க தலைவன் ஹபீஸ்சயீதும் இருந்தான்.
இது பெரும்சர்ச்சையை அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் கூறுகையில், “இந்த விவகாரத்தை மத்திய அரசு சாதாரணமாக நினைக்க கூடாது. இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் தடுக்க யாசின்மாலிக் போன்றவர்களது நடவடிக்கைகளை அரசு எப்போதும் கண் காணிக்க வேண்டும்” என்றார்.
பாஜ செய்திதொடர்பாளர் பிரகாஷ் ஜாவடேக்கர் கூறுகையில், ”யாசின்மாலிக் இந்தியா திரும்பியதும் அவரை கைதுசெய்து பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்யவேண்டும்” என்றார்
இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ... |
இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ... |
முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.