மதம் என்பது பொருளற்ற வெறும் சொற்களின் தொகுதி; மதம் என்பது வெறும் கொள்கைகளின் அமைப்பு; மதம் என்பது ஏதோ சிறிது அறிவால் ஒன்றை ஒன்றை ஒப்புக்கொள்வதோ மறுப்பதோ மட்டுமே; மதம் என்பது தங்கள் ப்ரோகிதர்கள் கூறுகின்ற சில வார்த்தைகளின் நம்பிக்கை வைப்பதே; மதம் என்பது தங்கள் முன்னோர் நம்பிய ஏதோ
ஒன்று; தேசியமானவை என்னும் காரனத்தால் தாம் பற்றி நிற்கும் ஒரு வகையான மூடக் கொள்கைகளும் கருத்துக்களுமே மதம் என்றெல்லாம் உள்ள பிதற்றலுக்கு அப்பால் நாம் செல்ல வேண்டும். இவை அனைத்தும் கடந்து , மெல்ல மெல்ல ஒளியை நோக்கி செல்கின்ற மாபெரும் ஓர் உயிராக மனித இனத்தை காண வேண்டும். கடவுள் என்னும் வியப்புக்குரிய மெய் பொருளை நாடி மெல்ல முதிர்ந்து வரும் ஓர் ஆச்சரியமான செடி என்று மனித இனத்தை கொள்ள வேண்டும்.அதற்கான ஆரம்ப முயற்சிகளும் முன்னேற்றங்களும் எப்போதும் சடப்பொருள் வாயிலாக, சடங்குகள் வாயிலாகத்தான் நடைபெறும். அதை நாம் மாற்ற முடியாது.
மனித சமுதாயத்திலிருந்து மதத்தை எடுத்துவிடுங்கள் . என்ன மிஞ்சும்? மிருகங்கள் நிறைந்த காடுதான் ….. இந்த மிருக மனிதனைத் தெய்வமாக்கப் போவதும் மதம்தான் .
நமது சமுதாயம் இப்போது இருக்கும் தாழ்ந்த நிலைமைக்கு மதம் காரணம் அல்ல. மதத்தை முறையாகப் பின்பற்றாமல் போனதுதான் சமுதாயத்தின் வீழ்ச்சிக்குக் காரணம்
–சுவாமி விவேகானந்தா
தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ... |
ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ... |
ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ... |
Leave a Reply
You must be logged in to post a comment.