காங்கிரசில், 2 அதிகார மையங்கள் இருப்பதே பிரச்னைக்கு காரணம். அதனால்தான், 20 ஆண்டுகளில் காங்கிரஸ் பலவீனம் அடைந்துள்ளது ; பாஜக பலம் பெற்றுள்ளது,” என்று , பா.ஜ.க., தலைவர், ராஜ்நாத்சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வரும் லோக்சபா தேர்தலில், தென்மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில், பாஜக ., அதிக இடங்களில் வெற்றிபெறும். கடந்ததேர்தலில், வடகிழக்கு மாநிலங்களில், நான்கு இடங்களில் வெற்றிபெற்றோம்; இந்த முறை கூடுதல் இடங்களில் வெற்றிபெறுவோம். ஐ.மு., கூட்டணிவசமிருந்து அதிகாரத்தை கைப்பற்றுவோம்.
கர்நாடகாவில், எடியூரப்பா தனிக் கட்சி தொடங்கியது , கட்சிக்கு பாதிப்பை உருவாக்கும் ; அதை எங்களின் பிறமுயற்சிகளால் சரிசெய்வோம்.லோக்சபா தேர்தல் பிரசாரத்தில், மத்தியில் ஆளும், ஐமு கூட்டணி அரசின் தோல்விகளை மட்டும் பட்டியலிட மாட்டோம்; நாங்கள் ஆட்சிக்குவந்தால், என்னசெய்வோம் என்பதையும் விளக்குவோம். கடந்த, இருபது வருடத்தில் பா.ஜ.க , பலமடைந்துள்ளது; காங்கிரஸ் பலவீனம் அடைந்துள்ளது.
காங்கிரஸ் பலவீன மானதற்கு காரணம், அங்கு, 2 அதிகார மையங்கள் உள்ளதுதான். பொதுவாக, பிரதமராக இருப்பவரிடமே அதிகஅதிகாரம் இருக்கும். ஆனால், காங்கிரசை பொறுத்தவரை அப்படியில்லை.கூட்டணி ஆட்சி என்றால், கூட்டணி கட்சிகளுக்கு முக்கியத்துவம் தந்தே ஆக வேண்டும். அதை போன்றதொரு சூழ்நிலை, வரும் தேர்தலிலும் உருவாகலாம் என்று ராஜ்நாத் சிங் கூறினார்.
இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ... |
அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ... |
பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.