தீவிரவாதிகளை ஒடுக்குகிறோம் எனும் பெயரில், ஆதாரம் இல்லாமல், யாரையும் கைதுசெய்யவும், அதிகாரத்தை உளவுத்துறை போலீசாருக்கு, வழங்கும் “தேசிய பயங்கரவாத தடுப்பு மையம்’ மசோதாவை கொண்டுவரும் , மத்திய அரசின் முடிவை பா.ஜ.க., கண்டித்துள்ளது.
இதுகுறித்து, பா.ஜ.க., செய்தி தொடர்பாளர், பிரகாஷ் ஜாவேத்கர் கூறியதாவது: குண்டுவெடிப்பு உள்ளிட்ட தீவிரவாத சம்பவங்களில் ஈடுபடும்_குற்றவாளிகளை, காவல்துறையினர் தாராளமாக கைதுசெய்யட்டும்; பயங்கரவாதிகள் தண்டிக்கவேண்டியவர்களே. ஆனால், அதற்காக தேசிய பயங்கரவாத தடுப்புமையத்தை ஏற்படுத்த, மத்திய அரசு முயற்சிசெய்வதை ஏற்க முடியாது. இந்த மையம் அமைக்கப்பட்டால், ஆதாரம் இல்லாமல், யாரை வேண்டுமானாலும் கைதுசெய்ய முடியும். மேலும், உளவுப் பிரிவு போலீசாருக்கு, எல்லையற்ற அதிகாரம் வழங்கப் படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. அதிகாரத்தை, உளவுபோலீசார் தவறுதலாக பயன் படுத்த மாட்டார்கள் என்பதற்கு, எந்தவித உத்தரவாதமும் இல்லை . ஜனநாயக நாட்டில், இதுபோன்ற சட்டங்கள் கிடையாது; சர்வாதிகார நாடுகளில்தான், இத்தகைய அடக்குமுறை சட்டங்கள் இருக்கும். உளவுப்பிரிவு போலீசாருக்கு, அதிகாரம் தருவதை, பா.ஜ.க., ஏற்காது. எனவே, பயங்கரவாத தடுப்புமையத்தை அமைப்பது என்ற, மத்திய அரசின் முடிவை, பா.ஜ., ஒரு போதும் ஒப்புக் கொள்ளாது என்றார்.
உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ... |
நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ... |
உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.