பத்து முக ருத்ராட்சம் ஸ்ரீ மஹா விஷ்ணுவின் அருள் நிறைந்ததாக ஸ்ரீ மத் தேவி பாகவதம் , மந்திர மஹார்ணவா , நிரண்ய சிந்து ஆகிய புராணங்கள் கூறுகின்றன .
விஷ்ணு,முருகப்பெருமான்,யமதேவர்,திக்பாலகர் , தசமஹவித்யா போன்ற அனைத்து தெய்வங்களின் ஆற்றலும் அருளும் இந்த மணியில் இணைந்து உள்ளதால் மிகவும் சக்தி வாய்ந்தது .
பத்மபுராணம் இந்த மணி யமதேவனின் அருள் நிறைந்ததாக கூறுகிறது.இந்த மணியை அணிபவர்களையோ , பூஜிப்பவர்களையோ நவகிரகங்களால் வரும் கேடு பலன்கள்,பேய்,பிசாசு , பிரம்ம ராட்சசர்கள் நெருங்கவே முடியாது .
பில்லி சூனியம்,கண் திருஷ்டி,மந்திர-தந்திரங்களால் வரும் கெடுபலன்களை தடுக்கும் ஆற்றல்
இம்மணிக்கு உண்டு .அகால மரணம் ஏற்படாது.
இந்த மணியை அணிவதாலோ,பூஜிபதாலோ வியாபாரச் சிக்கல் ,வழக்கு,பிரச்சனை,பகை,
வாஸ்து,தோஷம் யாவும் நீங்கும்.
இம்மணியும் அரிதாகவே கிடைக்கிறது.
யார் அணியலாம் :
பத்து முக ருத்ராட்சம் பத்து மணிகளும் ,ஒரு முக ருத்ராட்சம் ஒன்றும் இணைத்து அணிவதால் எத்தகைய நீதி மன்ற வழக்கும் வெற்றியைக் கொடுக்கும்.
பேய்,பிசாசு அச்சுறுத்தல் உள்ளவர்கள் ,வீடு மற்றும் தொழில் ஸ்தலங்களில் வாஸ்து தோஷம் உள்ளவர்கள் ,பில்லி சூனியத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இதன் ஒரு மணியை அணிந்தால் போதும் ,அப்படிப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபடுவர்.
வாழ்க்கையில் எந்த தொழில் செய்யலாம் ,எந்த துறையில் முன்னேற்றம் உண்டு என்று அறியாமல் தவிப்பவர்கள் இதை அணிந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.வாழ்வில் சரியான பாதையைக் காட்டும் ஆற்றல் பத்து முக ருத்ராட்சத்திருக்கு உண்டு .
மருத்துவ பயன்கள்:
இது தூக்கமின்மை ,கர்ப்பம் தரிப்பதிலுள்ளபிரச்சனைகள் ,இருதயக் கோளாறுகளைக் குணமாகும்.
மனம் சமநிலையில் இல்லாதவர்கள்,தன்னை யாரோ பின் தொடர்வது போன்ற மனப் பிரம்மை உள்ளவர்கள் இந்த மணியை வெறுமனே உடலில் அணிந்தலேயே குணம் பெறலாம் .
ருத்ராட்சமும் ஜோதிடமும்:
இதற்கு ஜோதிட அடிப்படையில் ஆதிக்க கிரகம் இல்லை.இதை அணிவதால் பாதுகாப்பு உணர்வு தோன்றும்.
ருத்ராட்ச மந்திரம்:
ஓம் ஹ்ரீம் நமோந் நமஹ :
நன்றி: ருத்ராட்சம் நூல் ஆசிரியர் கீர்த்தி
கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ... |
இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ... |
நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.