பக்தி வேதாந்த ஸ்வாமி ப்ரபுபாதா (பாகம் 1)

பக்தி வேதாந்த ஸ்வாமி ப்ரபுபாதா (பாகம் 1) ஐரோப்பியர்களும், ஆஸ்த்ரேலியர்களும், அமேரிக்கர்களும், ரஷ்யர்களும் என பல தேசத்து மக்கள் துளசி மாலைகளை கழுத்தில் அணிந்துக் கொண்டு, கையில் ஜப மாலையுடனும், நெற்றியில் திலகத்தோடும் உலகின் மூளை முடுக்குகளில் எல்லாம் "ஹரே க்ருஷ்ணா, ஹரே க்ருஷ்ணா" என்று ஜபித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் யார் ?

"அபோய் சரண் தே" என்ற எளிமையான அந்த மணிதர் கல்கத்தாவில் "ஸ்காட்டிஷ் சர்ச்" கல்லூரியில் பயில்கிறார். பின்னர் காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபடுகிறார். அவரின் பக்தி தொண்டை உணர்ந்து அவருக்கு "பக்தி வேதாந்த" எனும் பட்டத்தை தருகிறார்கள் கௌடிய வைஷ்ணவ ஆச்சாரியர்கள். அவர் "ப்ரபுபாதா" எனும் பெயரை இறைவனின் திருத் தொண்டாற்ற பெருகிறார்.

1922ல் ஸ்ரீல ப்ரபுபாதா, "பத்திசித்தாந்த சரஸ்வதி" என்பவரை சந்திக்க நேர்ந்தது. போலி சாமியார்கள் பலரை சந்தித்துள்ள ப்ரபுபாதா ஆரம்பத்தில் சந்தேகத்தோடுதான் அவரை சந்திக்கிறார். ஆனால் பக்தி சித்தாந்தர் அவரை பெரிதும் கவர்கிறார். பக்தி சித்தாந்தர் ப்ரபுபாதாவை "நீ ஆங்கிலத்தில் புலமையோடு இருக்கிற படியால், சைதன்ய மஹாப்ரபுவின் சித்தாந்ததை உலகம் முழுதும் பரப்புவதற்கு செல்ல வேண்டும்" என்கிறார். அதை உடனே ப்ர்புபாதா செயல்படுத்த முடியாத போதும், அவர் சொன்னதை ப்ரபுபாதா எப்போதும் நினைவில் கொள்கிறார்.

1950 களில் விருந்தாவனத்தில் அவர் பாகவத புராணத்தை சமஸ்கிருதத்தில் இருந்து மொழி பெயர்த்து உரை எழுதுகிறார். பக்தி சித்தாந்த சரஸ்வதி, ப்ரபுபாதாவை, "உனக்கு சிறிய தொகை கிடைத்தாலும் அதை வைத்து வைணவ புத்தகங்களை அச்சடித்துவிடு" என்று அறிவுரை வழங்கியுள்ளதை பின்பற்றுகிறார். ப்ரபுபாதா, பக்தி "ப்ரக்ஞாண கேஷவ" என்பவரிடம் தீட்சை பெற்று சந்நியாசம் பெறுகிறார். தனி ஒருவராகவே, பாகவத புராணத்தை விவரமான உரையோடு வெளியிடுகிறார்.

நாற்பது வருடங்களுக்கு பிறகு இறைவனின் அவதாரமாக போற்றப்படுகிற "சைதன்ய மஹாப்ரபுவின்" சித்தாந்தத்தை பரப்புவதற்காக தன் குருவின் ஆனைக்கு இணங்கி 1965ல் "ஜலதூதா" எனும் கப்பலில் அமேரிக்கா பயனிக்கிறார். அவரிடம் சிறிதளவே பனம் இருந்தது, சில புத்தகங்கள் இருந்தன அவ்வளவுதான்.

உலகெங்கும் லட்சக்கணக்கானவர்களை வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்திய‌ அந்த பயனம் மிக எளிமையாய் இருந்தது. அவரின் பயனத்தை யாருமே வழி அனுப்பி வைக்கவில்லை, அவருக்கு அமேரிக்காவில் யாரும் தெரிந்தவர் இல்லை, அவரின் பயனச் செலவுக்காக யாரும் பனம் தரவும் இல்லை. அமேரிக்காவில் அவரை யாரும் வரவேற்கவும் வரவில்லை. யாருமே தெரியாத அந்த பிரமாண்டமான நியூயாரக் நகரத்தில் அவர் தன்னந்தனியாக செல்கிறார்.

செப்டம்பர் 13, 1965ல் அவர் தன்னுடைய டைரியில் இந்த குறிப்பை எழுதுகிறார். "ஓ கிருஷ்ணா, நீ என்னை எதற்கு இங்கு அழைத்து வந்தாய் என்று தெரியவில்லை. நீ என்னை வைத்து என்ன வேண்டுமானாலும் செய்துக் கொள். உனக்கு என்னை கருவியாக வைத்து எதையோ செய்ய வேண்டும் என்று உள்ளது, இல்லையென்றால் இந்த பயங்கரமான இடத்திற்கு என்னை அழைத்து வந்திருக்க மாட்டாய். கிருஷ்ண உணர்வை நான் எப்படி இவர்களுக்கு புரிய வைப்பேன் ? நானோ அதிர்ஷ்டமில்லாதவன், தகுதி இல்லாதவன், மிகவும் தாழ்ந்தவன். ஆகையால் நான் உன்னை சரணடைந்து கேட்கிறேன், நீ அவர்களை சமாதாணப்படுத்தும் ஆற்றலையும் அறிவையும் எனக்கு வழங்கு" என்கிறார்.

நியுயார்க்கின் அடுக்கு மாடி குடியிருப்புகளின் எளிமையான அறைகளில் அவர் தங்குகிறார், இறைவனை அடைய மிகப்பெரிய அறிவும், ஞானமும், தேவையில்லை. வேத விற்பன்னர்களும் தத்துவ ஞாணிகளும் மட்டுமே இறைவனை அடைய முடியும் என்பது இல்லை. ஒரு சாமான்யனும் எளிய முறையில் "ஹரே கிருஷ்ண" மஹா மந்திரத்தை ஜபித்து, தூய்மையான சேவையின் வழியாக‌, இறைவனின் அருளை பெறமுடியும் என்ற எளிய சித்தாந்ததை அமேரிக்காவில் அவர் உபதேசிக்க தொடங்கினார்.

மாலை நேரங்களில் பகவத் கீதை சொற்பொழிவை நிகழ்த்துகிறார். இரண்டு அல்லது மூன்று மணி நேரமே அவர் பெரும்பாலும் உறங்குவார். அவர் நியூயார்க் வந்து ஒரு பத்து மாதம் இவ்வாறு கழிய தொடங்குகிறது, மெல்ல மெல்ல மேற்கத்திய மக்களிடையே அவரின் பக்திநெறியும் பரவுகிறது. அவர்களுக்கு இறைவனின் பிரசாதத்தை எப்படி உண்பது, ஜப மாலைகளை எப்படி உருட்டுவது, கோவிலை எப்படி சுத்தப் படுத்தி வைத்துக் கொள்வது என்று ஒவ்வொன்றாய் சொல்லித் தருகிறார். ஆரம்பத்தில் அவர் இறை உணர்வோடும் சமைத்து தரும் அந்த பிரசாதத்தை ருசிப்பதற்காகவே பல அமேரிக்கர்கள் வருகிறார்கள். அந்த சுவையில் மயங்கி மீண்டும் மீண்டும் வந்து அவர் செய்யும் அற்புதமான பஜனையில் லயிக்கிறார்கள். பின்னர் பகவத் கீதையையும், பாகவதத்தையும் படிக்கத் தொடங்குகின்றனர்.

"அகில உலக கிருஷ்ண உணர்வு இயக்கம்" மெல்ல நியுயார்கில் வளரத் தொடங்குகிறது. சிலர் அவரை, "'கிருஷ்ண' உணர்வு என்பதற்கு பதிலாக 'இறை' உணர்வு என்ற பொதுவான பெயரை வையுங்களேன்" என்று சொல்லும் போது, அதை மறுக்கிறார் ப்ரபுபாதா. "கிருஷ்ணர்" எனும் பெயர் எல்லா உருவங்களையும், கோட்பாடுகளையும் தன்னுள் அடக்கியது என்று அவர்களுக்கு விளக்குகிறார்.

இப்படி சாதாரணமாய் தொடங்கிய இந்த பயணம் எப்படி இன்று உலகின் மூளை முடுக்குகளிலெல்லாம் விஸ்வரூபம் எடுத்தது ? இரண்டாம் பாகத்தில் பார்க்கலாம்.

தொடரும்

Thanks; Enlightened Master

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்பேத்கருக்கு துரோகம் செய்த க ...

அம்பேத்கருக்கு துரோகம் செய்த காங்கிரஸ் இன்று நடிக்கிறது மாநிலங்களின் சம்மதத்துடன் இந்த நாடு உருவாகவில்லை.. இந்த நாட்டுடைய வசதிக்காக ...

சபையை செயல்பட விடாமல் தடுப்பதே ...

சபையை செயல்பட விடாமல் தடுப்பதே வெற்றி என்று எதிர்க்கட்சிகள் நினைப்பது மக்களுக்கு  தெரியும் மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு , ' ஐந்தாண்டு ...

நேச நலனுக்கு தேவையானதை பயப்படா ...

நேச நலனுக்கு தேவையானதை பயப்படாமல் செய்வோம் – ஜெய்சங்கர் 'எங்களுடைய தேச நலனுக்காகவும், உலக நலனுக்காகவும் எது சரியானதோ ...

ஜெர்மனியில் நடந்த கொடூர தாக்கு ...

ஜெர்மனியில் நடந்த கொடூர தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் ஜெர்மனி சந்தையில், நடந்த கொடூரமான தாக்குதலுக்கு மத்திய வெளியுறவுத் ...

இந்தியா-குவைத் உறவு மேலும் வலுப ...

இந்தியா-குவைத் உறவு மேலும் வலுப்படும் : பிரதமர் மோடி பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக ...

பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு ம ...

பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக குவைத் பயணம் பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக ...

மருத்துவ செய்திகள்

மல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்

மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ...

வெண் தாமரைப் பூ

இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ...

பொடுகு நீங்க

பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ...