இத்தாலி வீரர்களை இந்தியாவுக்கு திரும்பஅனுப்ப மறுப்பது கண்டனத்துக்கு உரியது என்று தமிழக பா.ஜ.க., தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் மேலும் அவர் தெரிவித்ததாவது உச்சநீதிமன்ற அனுமதியுடன் சென்ற இத்தாலி கடற் படை வீரர்களை அந் நாட்டு அரசு திரும்ப அனுப்பமறுப்பது கண்டனத்துக்குரியது. அவர்களை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். அதே போல தமிழக காவல் துறையினரால் குற்றவாளியாக அறிவிக்கப் பட்ட இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந் தாவை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தமிழக மீனவர்களின் மீது இலங்கை கடற் படை தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. உலகில் எந்தபகுதியிலும் இத்தகைய தாக்குதலில்லை. எல்லை தாண்டும் மீனவர்கள் துன்புறுத்தப் படுவதில்லை. இலங்கை மீனவர்கள்கூட இந்திய எல்லைக்குள் வரும்போது அவர்களை தாக்கியதாகவோ, துன்புறுத்தியதாகவோ எந்தபுகாரும் இல்லை. தமிழக மீனவர்களின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவது இந்தியாமீது அறிவிக்கப் படாத போரை நடத்துவதை போன்று உள்ளது என்றார்.
வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ... |
ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ... |
நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.