லண்டன் சதி வழக்கு – 4

 மதன்லால் திங்காராபிடிபட்ட மதன்லால் திங்காரா போலிஸ் காவலில் விசாரிக்கப்பட்டான், பின்னர் கோர்ட் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டான், திங்காரா குற்றவாளி என்று ஜூரிகள் தீர்ப்பு கூறி விட்டனர். நீதிபதி மதன்லால் திங்காராவைப் பார்த்து "நீ ஏதாவது கூற விரும்புகிறாயா?" என்று கேட்டபது, அவன் சொன்னான்,

"கனம் நீதிபதி அவர்களே, இன்று உங்கள் சாம்ராஜ்யம் பலமாக இருக்கின்றது, அதனால் நீங்கள் விரும்பியதையெல்லாம் செய்யலாம், அதனைப்பற்றி எனக்கு துளியும் கவலை இல்லை,ஆனால் எங்களுக்கும் ஒரு காலம் வரும், அப்போது நாங்கள் விரும்பியதையெல்லாம் செய்வோம்,அப்போது நீங்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்,

ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். கடந்த ஐம்பது ஆண்டுகளில் சுமார் எட்டுக்கோடி இந்தியர்களை நீங்கள் கொன்று குவித்திருக்கிறிர்கள். ஆண்டு தோறும் இந்தியாவிலிருந்து லட்சக்கணக்கான பவுன்களை இங்கிலாந்திற்கு சுரண்டிக்கொண்டு வருகிறிர்கள்.

தேசபக்தியுள்ள எங்கள் நாட்டுத்தலைவர்களையும் இளைஞர்களையும் நாடு கடத்தியும், தூக்கிலிட்டும் வருகிறிர்கள்..இதற்கு பழி தீர்க்கவே கர்ஸான் வில்லியை சுட்டுக் கொன்றேன்.என்னைக் கைது செய்யவோ, விசாரிக்கவோ, தண்டிக்கவோ, பிரிட்டிஸ் கோர்ட்டுக்கு அதிகாரம் கிடையாது,இதுதான் என் எண்ணம்,அதனால்தான் உங்கள் விசாரணையில் கலந்து கொள்ளவோ, வழக்கறிஞர் உதவி பெற்று வாதாடவோ,இல்லை.

ஜெர்மனியின் ஆதிக்கத்தினை எதிர்த்து போராட உங்களுக்கு எப்படி உரிமை உண்டோ , அதே உரி,மை உங்களை எதிர்த்துப் போராட எங்களுக்கும் உண்டு, ஜெர்மனியை எதிர்த்துப் போராடுவது இங்கிலந்துக்கு எப்படி தேசபக்தி மிக்க கடைமையோ,அதேபோல இங்கிலாந்தினை எதிர்த்துப் போரிடுவது இந்தியர்களுக்கும் தேசபக்தி மிக்க கடமைதான், இதற்காக ஆங்கிலேயர்களை சுட்டுக் கொல்வதுதான் நியாயம், அதைத்தான் நான் செய்தேன், அதற்காக எனக்குத் தூக்குத்தண்டனை விதியுங்கள், அதைத்தான் நான் விரும்புகிறேன், ஏனென்றால் என்னை நீங்கள் தூக்கிலிட்டு கொன்றால்தான் , உங்களை பழிவாங்க வேண்டுமென்ற என் தாயகத்து இளைஞர்களின் பழியுணர்வு மேலும் கூர்மையடையும்,!"

-இதைக்கேட்டு சில நிமிடங்கள் நீதிமன்றமே நிசப்தமாக நின்றது, நீதிபதி பேச வகையின்றி  மதன்லால் திங்காராவிழித்தார், பின்னர் தன் தீர்ப்பினை படித்தார், தீர்ப்பின் படி திங்காரா விற்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது,

தீர்ப்பினைக் கேட்ட திங்காரா சொன்னான், " மிக்க நன்றி நீதிபதி அவர்களே! என் சார்பில் மட்டுமன்றி என் தேசத்தின் சார்பிலும் உங்களுக்கு நன்றி! என் தாயகத்தின் விடுதலைக்காக என் அற்ப உயிரினை சமர்ப்பிக்கும் தியாகச் சிறப்பினை எனக்கு அளித்ததற்காக நான் மிகவும் பெருமைப் படுகிறேன்!"

(தொடரும்)
வரலாற்று நினைவுகளுடன் ராம்குமார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ட்ரம்ப் உடன் அற்புதமான சந்திப் ...

ட்ரம்ப் உடன் அற்புதமான சந்திப்பு – பிரதமர் மோடி நெகிழ்ச்சி 'வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்புடன் நடந்த சந்திப்பு அற்புதமானதாக ...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்த ...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்தித்தார் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் டொனால்டு ...

உளவுத்துறை அதிபர் துளசியுடன் ப ...

உளவுத்துறை அதிபர் துளசியுடன் பிரதமர் மோடி சந்திப்பு வாஷிங்டன் அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, புதிதாக ...

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இந் ...

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இந்தியா- தாய்லாந்து உறவு -பிரதமர் மோடி 'இந்தியாவும், தாய்லாந்தும் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான ஆழமான ...

மோடி ஆட்சியில் தன்னிறைவு பெற்ற ...

மோடி ஆட்சியில் தன்னிறைவு பெற்ற இந்தியா – பாஜக எம் பி தேஜஸ்வி சூர்யா பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாடு தன்னிறைவு அடைந்து ...

பாஜக ஆளாத மாநிலங்களை மத்திய அரச ...

பாஜக ஆளாத மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கவில்லை – நிர்மலா சீதாராமன் ''பா.ஜ., ஆளாத மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்ற ...

மருத்துவ செய்திகள்

பால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை

பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ...

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...