பலவீனமான பிரதமரால் இந்தியாவின்நிலை தாழ்ந்துவிட்டது

 பலவீனமான பிரதமரால் இந்தியாவின்நிலை தாழ்ந்துவிட்டதுபலவீனமான பிரதமரால் இந்தியாவின்நிலை தாழ்ந்துவிட்டது என் பா, ஜ,,கட்சியின் மூத்த தலைவர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். பாஜக.வின் இரண்டு நாள் தேசிய செயற் குழு கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவில் நடந்தது . இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த அருண் ஜெட்லி நிருபர்களிடம் கூறுகையில்,

ஒருதேசமாக இந்தியாவின் நிலை உயர்ந்துள்ளது என பிரதமர் மன்மோகன் சிங் அடிக்கடி சொல்லிவருகிறார். ஆனால் உண்மை என்னவெனில் பலவீனமான பிரதமரால் இந்தியாவின்நிலை தாழ்ந்துவிட்டது. இந்திய பெருங் கடலில் அமைந்துள்ள மிகசிறிய நாடான மாலத் தீவு நமக்கு சவால்விடுகிறது.

இந்திய ராணுவவீரர்களின் தலையை பாகிஸ்தான் ராணுவம்வெட்டி எடுத்து செல்கிறது. அப்சல்குரு தூக்கிலிடப்பட்டதை கண்டித்து அந்நாட்டு நாடாளுமன்றம் தீர்மானம் நிறை வேற்றுகிறது. இவை எல்லாம் நடந்தபிறகும் பாகிஸ்தானுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் தயாராக உள்ளார் .

முன்பு போபர்ஸ் ஊழலில் தொடர்புடைய குவாத்ரோச்சி நாட்டைவிட்டு தப்பினார். இப்போது இத்தாலிய கடற் படை வீரர்கள் உச்ச நீதிமன்றத்தில் தவறான உத்தரவாதம் தந்து இந்தியாவில் இருந்து தப்பிசென்று விட்டனர். ஐ.மு., கூட்டணி அரசு இந்தியாவின் தலையை நிமிரசெய்துள்ளதா அல்லது தலையை குனியவைத்துள்ளதா என்பதை மக்கள் முடிவுசெய்வார்கள்.

இந்த அரசு உறுதியானமுடிவு எடுக்காததால் இந்தியாவுக்கு வரவேண்டிய ரூ. 7 லட்சம்கோடி அன்னியமுதலீடு இன்னும் வந்து சேரவில்லை. முடிவெடுக்காமை என்பது ஐ.மு., கூட்டணி அரசின் சுபாவமாக உள்ளது. பல்வேறு பிரச்சினைகளில் கூட்டணி கட்சிகளே அவ்வப் போது காங்கிரசுடன் முறைத்து கொள்கின்றன என கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...

யானைக்கால் நோய் குணமாக

முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ...

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...