திமுக. பொருளாளர் மு.க.ஸ்டாலின் வீட்டில் சிபிஐ. நடத்திய விசாரணை துரதிர்ஷ்ட வசமானது, கடும் அதிர்ச்சி தரக்கூடியது என்ற பிரதமர் மன்மோகன் சிங்கின் கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து பாஜக மூத்த தலைவர் அருண்ஜெட்லி தெரிவித்ததாவது . ‘விதிமுறைப்படி சிபிஐ. சோதனை நடத்தியது என்றால், எதற்காக பிரதமர் அதிர்ச்சியில் உறையவேண்டும்? பிரதமரின் கருத்து துரதிர்ஷ்ட வசமானது’ என்று அவர் கூறினார்.
‘சிபிஐ. சோதனையை தடுத்து நிறுத்த பிரதமருக்கோ, நிதி அமைச்சருக்கோ அதிகாரம் இல்லை. இதில் எந்தவிதத்திலும் பிரதமரோ, நிதிமந்திரியோ தலையிடவோ, தடுத்துநிறுத்தவோ முடியாது.
இதற்கு முன்பு பலர்மீது சிபிஐ. சோதனை நடத்தப் பட்டுள்ளது. அந்த சோதனைகளின் போதெல்லாம் பிரதமர் கண்டனம்தெரிவிக்க வில்லையே?’ அது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ... |
1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ... |
முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.