எதிர் கட்சிகளை ஒடுக்க சிபிஐ.யை ஆயுதமாக பயன் படுத்தி வந்த மத்திய அரசின் நாட்கள் எண்ணப் படுகின்றன. மைனாரிட்டியாக இருந்த காங்கிரஸ் அரசு, சிபிஐ.யை தவறாக பயன்படுத்துவதன் மூலம் ஆட்சியை தக்கவைத்து கொள்ள நினைக்கிறது என்று பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் பேசியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் பேசியதாவது ; பலவீனமான ஐ.மு. கூட்டணி ஆட்சி எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கவிழலாம்.
ராவணனை ராமர் கொன்றதுபோல் காங்கிரஸ் ஆட்சியை, அவர்கள் செய்த ஊழலே கொன்றுவிடும். மக்களிடையே நம்பகத் தன்மையை இழந்துவிட்ட காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரவேமுடியாது.
ஐ.மு., கூட்டணி அரசின் தவறானதிட்டமிடல் மற்றும் பொருளாதார கொள்கையினால் விலை வாசியும், பணவீக்கமும் உயர்ந்துகொண்டே போகின்றன.
வாஜ்பாய் ஆட்சியின்போது ஊழலை எதிர்த்துபோராடி, அணு ஆயுத சோதனை நடத்தி நாடு முன்னேற்ற பாதையில் நடை போட்டது என்று அவர் பேசினார்.
வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ... |
சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ... |
Leave a Reply
You must be logged in to post a comment.