கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்

கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம். இதற்கு ஒரு சரியான காரணம் உண்டு. கோவில் என்று ஒன்று இருக்க வேண்டுமானால் ஊரின் எட்டு திசையில் கோலானது பெரும்பாலும் ஊரின் கன்னி மூலையில் தான் அமைந்திருக்கும். அடுத்து ஊரில் உள்ள எல்லாவித வீடுகள் மாளிகைகளை காட்டிலும் கோவிலானது அளவில் பெரியதாகவும் ,உயரமான கோபுரத்தோடும்

அமைந்திருக்கும். இதனால் கன்னிமூலை வாஸ்து சாஸ்திரப்படி பாரமாகவும் , உயரமாகவும் இயற்கையாகவே அமைந்துவிடும்.இப்படி அமைத்து விட்டாலே மற்ற திசைகளுக்கு உரிய சக்தி தானாகவே வந்துவிடும்.

ஒரு ஊரின் கன்னி மூலையில் கோவில் அமைவதால் மட்டும் அந்த ஊருக்கு சிறப்புக்கள் வந்து விடாது .அந்த கோவிலில் ஆறுகால பூஜைகள் நடைபெறவேண்டும் .ஊர்முழுக்க கேட்கும்படி மணி சப்தம் ஒலிக்க வேண்டும் .அந்த கோயிலுக்கு என்று மரத்தால் ஆன தேர் ஒன்றும் கட்டாயம் இருக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக கோயிலுக்கு ஈசான்ய பாகத்தில் திருக்குளம் அமைந்திருந்தால் அந்த ஆலயம் காலத்தால் நாளுக்கு நாள் அருள் அலைகள் பெருகி சிறப்பு மிகுந்த ஆலயமாக திகழும் .அது மாத்திரமல்ல ,அந்த கோவிலின் கோபுர கலசத்தில் தான் எல்லாவித சிறப்புகளும் ஒளிந்துள்ளன .அதன் வழியாக
தான் ஊரில் அமைதியும் செல்வமும் பெருக்கெடுக்கச் செய்யும் சக்தி மிகுந்த அலைகள் பரவுகின்றன .

அந்த காலத்தில் அரசர்கள் தான் கிராமங்களை வடிவமைத்தனர். அப்படி வடிவமைக்கும் பொது ஆறு பாயும் இடமாகப் பார்த்து கிராமங்களை நிறுவினார்கள். கிருஷ்ணா ,ராமா என்று இறை நினைப்போடு இருப்பவர்கள் அமைதியாக வாழும் இடம் என்கிற பொருளில் வந்து தான் கிராமம் என்று கூறுவார்கள் .அப்படி வடிவமைக்கும் போது வடக்கு பக்கம் ஆறு ஓடும்படி பார்த்துகொண்டு ஆற்றுக்குத் தென் பக்கத்தில் ஊரை வடிவமைப்பார்கள் பெரும்பாலும் செவ்வகமாகவே வடிவமைப்பார்கள் .

இப்படி இருக்கும் போது தென் புறத்தில் மலையோ , காடோ இருந்தால் அந்த ஊரை மிக விசேசமாக கருதுவார்கள். பெரும்பாலும் ஊரில் எல்லோருமே வளமோடு தான் இருப்பார்க்கள்.அப்படி வடிவமைக்க படும் ஊரின் சிறப்பையும் ஏதாவது ஒரு விதத்தில்
குறித்து வைப்பார்கள் .எழுதி வைப்பது ஒரு விதம் ……கோவிலுக்குள் சங்கேத பாஷையில் சிற்பங்கள் மூலமாக செதுக்கி வைப்பது இன்னொரு விதம்! குறிப்பாக ஒரு ஊரின் கோவில் கோபுரம் அந்த ஊரைப்பற்றிய நன்மை தீமைகளை சொல்லும் விதமாக இருக்கும். இதை பார்த்து அறிய நமக்கு பட்டறிவு வேண்டும் .

பொதுவில் ஊரின் கன்னி மூலையில் கோயிலைக் கட்டினால், அக்னி பாதத்தில் மயானம் வரும்படி பார்த்துக் கொண்டார்கள் .அதே போல ஈசான்ய மூலையில் ஆறும் குளமும் அமையும் படியும் பார்த்து கொண்டனர். அது வழியாகவே ஊருக்குள் வந்து செல்லும் பாதையை வடிவமைத்து கொண்டனர்.வாயு மூலையில் பெரிய தோட்டம் மற்றும் மைதானம் அமைத்து அங்கே உடற்பயிற்சிகள் செய்ய வழிவகை செய்தனர் .ஊரின் நட்ட நடுவில் ஒரு பெரிய கல் மண்டபம் எழுப்பி அங்கிருந்து நான்கு புறமும் நான்கு திசைநோக்கி செல்ல தெருக்களை உருவாக்கினார்கள் . கல் மண்டபத்தை சுற்றி வேலிபோட்டு அதன் மையமான பிரம்ம பாகத்தில் எவர்காலும் படாதபடி பார்த்து கொண்டனர்.இப்படி மிக சரியாக திட்டமிட்டு உருவாக்கப்பட்ட எந்த ஒரு ஊரும் காலத்தால் வளராமல் போனதே இல்லை. இப்படிப் பட்ட ஊர்களில் வாழ்பவர்கள் ஒற்றுமையுடனும் நோய் நொடி இன்றியும் வாழ்ந்தனர் .இந்த ஊரின் தேவையான ஆக்க சக்தியை கோயில் கலசம் தவறாமல் வளங்கிகொண்டிருக்கிறது . இருந்தும் காலத்தால் சில கோயில்கள் பாழ்பட்டு போயின .அதாவது திட்டமிட்டு சிலர் அந்த
கோயில்களை நாசம் செய்தனர். அப்படி செய்ததன் பின்னால் மிகபெரிய சுயநலம் ஒளிந்திருக்கிறது.

நன்றி: இந்திரா சௌந்திரராஜன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...