நிலக்கரி சுரங்க ஊழலை விசாரிக்க சிறப்புவிசாரணைக் குழுவை அமைக்கவேண்டும் என பா.ஜ.க., மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க் கட்சி தலைவருமான அருண்ஜேட்லி வலியுறுத்தியுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ. விசாரணையில் மத்தியஅரசு தலையிடுகிறது . இதுதொடர்பாக மத்திய சட்டத்துறை அமைச்சர் அஸ்வினிகுமார் பதவி விலகவேண்டும் என கோரிக்கைவிடுத்தார்
கடந்த 2004-ஆம் வருடம் முதல் மத்தியஅரசு மேற்கொண்ட நிலக்கரிசுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்துள்ளதாகவும், இதனால் அரசக்கு ரூ. 1.86 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தலைமைகணக்கு தணிக்கையாளர் குற்றம் சுமத்தியிருந்தார் . இது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்திவருகிறது.
இந்நிலையில், சமீபத்தில் சிபிஐ. இயக்குநரை அழைத்து மத்திய சட்டத் துறை அமைச்சர் அஸ்வினிகுமார் பேசினார். அதன் பிறகு , சிபிஐ. அறிக்கையில் மாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் இது குறித்து அருண்ஜேட்லி கூறியதாவது: மத்திய அரசு சிபிஐ.யை சுதந்திரமாகசெயல்பட அனுமதிக்கவில்லை. இதன் காரணமாக சிபிஐ.யால் உண்மைகளை கண்டறிய முடியவில்லை. அதையும் தாண்டி சிலநேர்மையான அதிகாரிகள் தீவிரமாக செயல்படமுனைந்தால், அதை ஐ.மு.,கூட்டணி அரசு தடுக்கிறது; வஞ்சகமாக செயல் படுகிறது. வழக்கு பற்றிய முழுவிவரத்தை உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கவிடாமல் சிபிஐ.யை தடுப்பதன் மூலம், நீதித் துறையின் செயல்பாட்டிலும் இந்த அரசு குறுக்கிடுகிறது.
நிலக்கரி சுரங்க விவகாரத்தில் திருத்த படாத முந்தைய அறிக்கையை சிபிஐ., உச்சநீதிமன்றத்தில் தாக்கல்செய்வதுடன், மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் அதை பகிரங்கமாக வெளியிடவேண்டும்.
நாட்டில் பலபகுதிகளில் உள்ள மின்உற்பத்தி நிலையங்களுக்கு போதிய நிலக்கரி கிடைக்காத நிலையில், தனக்கு வேண்டிய வர்களுக்கு மத்தியஅரசு முறைகேடாக நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடுசெய்துள்ளது.
இப்போது சிபிஐ.யின் செயல்பாட்டில் மத்திய அரசு தலையிடுவது தெரியவருகிறது . இதனால், இந்தவழக்கில் சிபிஐ.யால் நேர்மையான விசாரணையை மேற்கொள்ளமுடியாது. எனவே, சிறப்புவிசாரணைக் குழுவை அமைத்து, அதனிடம் இந்தவழக்கை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.” என்றார் ஜேட்லி.
முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ... |
இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ... |
கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.