பா.ஜ.க., வின் பிரதமர்வேட்பாளர் யார் எனும் கேள்விக்கு அடுத்தமாதம் விடை கிடைத்து விடும் என்றும் . மே மாதத்தில் கட்சியின் பிரதமர்வேட்பாளர் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் பா.ஜ.க., தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது ; கர்நாடக சட்ட சபை தேர்தலுக்கு பிறகு கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை நடத்த உள்ளேன்; மேலும் பா.ஜ.க., வின் பார்லிமென்ட்குழு கூடி கட்சியின் பிரதமர்வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்யும். குஜராத் முதல்வர் நரேந்திரமோடி ஒரு வகுப்புவாத தலைவர் என்பதை ஏற்றுகொள்ள முடியாது . கட்சியின் அதிக புகழ் பெற்ற தலைவர்களுள் மோடியும் ஒருவர் .
மோடி குறித்த பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் குற்றச்சாட்டு அர்த்தமற்றது . பா.ஜ., வில் யாரும் வகுப்பு வாதிகள் அல்ல; எங்களுடையது மதசார்பற்றகட்சி மட்டுமே; அனைத்து மனிதர்களையும் நாங்கள் சமமாகவே கருதுகிறோம்;
இனம், மதம், மொழி என்று யாரையும் பிரித்து பார்ப்பதில்லை; மோடியின் மீது எந்த தவறும் இருப்பதாக கருதவில்லை; அப்படி அவர் தவறுசெய்திருந்தால், பெருவாரியான ஓட்டுக்களை பெற்று தொடர்ந்து 3 வது முறையாக வெற்றிபெற்று ஆட்சியமைக்க முடியுமா; அவர் நாடுமுழுவதும் அனைத்து சமூக மற்றும் அனைத்து பகுதி மக்களிடமும் புகழ்பெற்றவர்; பா.ஜ.க, எந்தபதவிக்கும் யாருக்கும் போட்டியில்லை; பா.ஜ.க., கூட்டணியில் இருந்து யார் பிரிந்துசென்றாலும் அது பா.ஜ.,வை எந்தவிதத்திலும் பாதிக்காது. என்று ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ... |
நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ... |
முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ... |
Leave a Reply
You must be logged in to post a comment.