கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றார்கள் நம் முன்னோர்கள். கோவில்கள் என்பது இறைவனை வணங்கும் இடம் மட்டும் அல்ல. அது ஒரு சமூகத்தை சீரமைக்கும் இடம். அது பொருள் சார்ந்த இந்த உலகத்தில் உழலும் நம்மை, அதையும் தாண்டி ஒரு மெய்யான உண்மை இருப்பதை நினைவூட்டி நம்மை செம்மை படுத்தும்
இடம். பண்டைய பாரதத்தில் ஒவ்வொருவர் வாழ்விலும் கோவில் என்பது அடிப்படை ஆதாரமாய் இருந்தது. ஒவ்வொரு கிராமத்திலும் மக்கள் தங்கள் குலதெய்வங்களோடு இரண்டற கலந்து இருந்தார்கள். இறைவன் என்பவன் ஏதோ ஆகாயத்தில் ஒரு மூலையில் இருப்பவனாக நினைக்காமல், தங்களின் ஒவ்வொரு சுக துக்கங்களிலும் பங்கு கொள்ளும் ஒரு சக்தியாகவே இறைவனை மக்கள் நினைத்தார்கள். ஊர் கோவில் திருவிழாவை ஒட்டியே மக்கள் ஒன்று கூடினார்கள். தேசத்தின் செல்வ வளங்கள் கோவிலுக்குள் தான் வைக்கப்பட்டன. மக்களுளிடையே தர்ம நெறிகளும், இறையச்சமும், மிகுந்திருந்தன.
அப்படிப்பட்ட பாரதத்தின் இன்றைய நிலை என்ன ? குறிப்பாக தமிழகத்தில் நம் கோவில்களும், அவற்றின் நிர்வாகமும் எப்படி இருக்கிறது ? சிவன் சொத்து குல நாசம் என்பார்களே, இன்று அந்த சிவனின் சொத்தை கொள்ளையடிக்கும் கயவர்கள் எப்படி இருக்கிறார்கள் ? தென்னிந்தியாவை ஆண்ட மிகப் பெரும் அரசர்கள் கட்டிய கோவில்களும், செய்த சேவைகளும் சொல்லில் அடங்காது. மிகப்பெரும் சாம்ராஜ்யங்களை தங்கள் வீர பராக்கிரமத்தால் விளைவித்த நம் சேர, சோழ, பாண்டிய பேரரசர்கள், தங்கள் உடல், பொருள், ஆவி ஆகியவற்றை இறைவனுக்கு முன் அர்ப்பணித்தார்கள். தங்கள் வாழ்நாளில் பெரும் பங்கை அருமையான, வரலாற்று புகழ் மிக்க கோவில்களை உண்டாக்குவதற்காக செலவழித்தார்கள். ஆனால் இன்று ?
கோவில்கள் கொடியவனின் கூடாரம் ஆகக் கூடாது என்று கொக்கரித்து கொண்டு ஆட்சிக்கு வந்த போலி நாத்திக நாதாரிகள், கோவில் சொத்தை கொஞ்ச நஞ்சமா கொள்ளை அடித்து உள்ளனர் ? தமிழ் நாட்டில் உள்ள ஹிந்துக்கள், கோவில்களுக்காக வாரிக் கொடுப்பதில் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. ஆனால் அப்படி வாரிக் கொடுப்பதெல்லாம் இறைவனுக்கோ, அவன் பக்தர்களுக்காகவோ போகிறதா ? இடையில் நிற்பவர்கள் தானே அதை தின்று தீர்க்கிறார்கள் ?
தமிழ்நாட்டில், ஸ்ரீரங்கம், பழனி, சிதம்பரம், திருச்செந்தூர், மதுரை மீனாட்சி, காஞ்சி காமாட்சி, தஞ்சை பெரிய கோவில் என எத்தனையோ சக்தி வாய்ந்த திருத்தலங்கள் உள்ளன. ஆனால் அவற்றின் நிர்வாகம் எப்படி இருக்கிறது ? பெரும்பான்மையான கோவில்கள் ஹிந்து அறநிலயத்துறை என்கிற பெயரில், அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. ஹிந்துக்களின் பணம் அரசுக்கு செல்கிறது. ஆனால் அவை செம்மையாக செலவு செய்யப் படுக்கிறதா ? ஹிந்துக்களிடம் வசூல் செய்யப்படும் கோடிக்கணக்கான பனம் வேறு துறைகளுக்கு செலவு செய்யப்படுவது கொடுமை அல்லவா ? மற்ற மதத்தினர் தங்கள் சர்சகளையும் மசூதிகளையும் தாமாகவே நிர்வாகம் செய்து, வரவு செலவு கணக்குகளை செம்மையாக பராமரித்து, வெளிநாட்டு பணத்தை வரவழைத்து, மேலும் மேலும் பல மசூதிகளையும், சர்சுகளையும் உருவாக்குகிறார்கள். அவர்களின் வளர்ச்சி இதனால் மேலும் மேலும் அதிகரிக்கிறது.
ஆனால் நம் கோவில்கள் ? எல்லாமே ஏதோ கடனே என்று நடத்தப் படுகின்றன. ஏதேதோ திட்டங்கள் பெயரலவில் அறிவிக்கப்படுகின்றன, சிலருக்கு மட்டும் உயயோகமாக சில காலம் நடைபெறுகின்றன, பக்தர்களுக்கு நல்ல வசதிகள் செய்து தரப்படுவதில்லை. நல்ல வருமானம் வரும் கோவில்களில் இருந்து, வருமானம் இல்லாத கோவில்களுக்கு நிதி செல்வதில்லை. நாயன்மார்களும், ஆழ்வார்களும் பாடிய பல ஆயிரம் கோவில்கள், தமிழகத்தில் வருமானம் இல்லாமல் சிதைந்த நிலையில் இருக்கின்றன. சரியான நிர்வாக கட்டமைப்பு இல்லாத காரணத்தினால் கொள்ளை அடிப்பவர்களின் கூடாரமாக கோவில்கள் திகழ்கின்றன. ஊழலின் ஊற்றுக் கண்ணாக கோவில்கள் திகழ்கின்றன. இதனால் தமிழர்கள் பெரும்பாலும் நிர்வாகம் சிறப்பாக உள்ள வேற்று மாநில கோவில்களான திருப்பதி, சபரிமலை போன்ற திருத்தலங்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. இதில் என்ன கொடுமை என்றால், இப்படி தமிழகத்தின் கோவில் நிர்வாகத்தை நாசப்படுத்திய நாத்திக கும்பலே, தமிழர்களை தமிழ்நாட்டு கோவில்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்துவதுதான்.
அரசாங்கள் இப்படி ஹிந்துக்களின் சொத்தை சரியாக நிர்வாகம் செய்யாமல், திருப்பதி, சபரிமலை போல தன்னிச்சையான அதிகாரமும் நம் கோவில்களுக்கு தராமல் இருப்பது ஒரு புறம் என்றால், மற்றொருபுறம் கோவில்களுக்குள் நடக்கும் வியாபாரங்கள், சலுகைகள், பாரபட்சம் போன்ற கொடுமைகள்.
தமிழ்நாட்டில் புதிதாய் வரும் வழிப்பாட்டு தளங்களை யாரேனும் கவனித்து வருவது உண்டா ? எந்த முக்கிய சாலைகளிலும் புத்தம் புதிய நவீன சர்ச்சுக்கள்தான் அதிகம் முளைக்கின்றன. நிலங்களின் மதிப்பு கூடி விட்டதால், புதியதாய் கோவில்கள் முக்கிய சாலைகளில் இடம் பெறுவதில்லை. ஆண்மீகவாதிகள் பலர் தங்கள் சொந்த பணத்தை போட்டு எங்காவது குறுக்கு சந்துகளில் ஒரு சிறிய நிலம் வாங்கி, அதில் சிறிய அளவில் கோவில் கட்டுகிறார்கள். அதுவும் கொஞ்சம் வருமானம் வளர்ந்த நிலையில் அரசாங்கம் கையகப்படுத்துகிறது.
அன்றைய அரசர்கள் கட்டிய கோவில்களை தவிர புதியதாய் அரசால் கட்டப்பட்டுள்ள ஒரு புதியதொரு பெரிய கோவிலை சொல்ல முடியுமா ? அன்றைய அரசர்கள் கட்டிய கோவில்களையே இன்றைய அரசு சரியாய் பராமரிப்பது இல்லையே ? இதில் புதிதாய் வேறு கட்டவா போகிறார்கள் ? இப்படி ஆண்மீகத்தில் நாட்டமில்லாத அரசு எதற்காக கோவில்களை நிர்வாகம் செய்ய வேண்டும் ? ஒவ்வொரு கோவில்களுக்கும் திருப்பதி போல் ஒரு சுய நிர்வாகத்தை அமைத்து, சமுதாயத்தில் மதிப்புக்குரிய நிலைகளில் உள்ளவர்களை கொண்ட ஒரு குழுவை கண்கானிப்பதற்காக போடலாமே ? அப்படி எல்லாம் செய்தால், கோவில்களில் கிடைக்கும் கோடிக்கணக்கான வருமானம் போய்விடும் என்கிற கவலையா ? ஹிந்துக்கள் ஒன்று சேர்ந்து தட்டி கேட்க மாட்டார்கள் என்ற தைரியம் தானே ? அப்படியே தட்டி கேட்டால் அவர்களை ஜாதி வாரியாக பிரித்து சுலபமாய் சமாளித்துவிடலாமே.
மிகப்பழங்காலத்தில் தோன்றிய கோவில்களுக்கு கூட சரியான பராமரிப்பு இல்லை. வருமானம் இல்லாத சில கோவில்களின் வருமானத்தை பெருக்குவதற்கு அரசங்கம் சரியானபடி திட்டம் தீட்டுவது இல்லை. அறநிலயத்துறை எனும் கொள்ளைக் கூட்டத் துறை இதைப் பற்றி எந்த கவலையும் கொள்வதாய் தெரியவில்லை. தமிழ்நாட்டில் இந்தத் துறை ஒரு மூன்றாம்தர துறையாகவே கருதப்படுகிறது. ஆனால் வருவாயில் வேறு எந்த துறைக்கும் இது சளைத்தது அல்ல. கோடாணு கோடி ரூபாய்கள் கோவில்களில் வசூலாகின்றன. அவை எவ்வாறு செலவு செய்யப்படுகின்றன என்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ளது. எதிர்கால திட்டங்கள் என்று சிறப்பான வகையில் எதுவும் செய்வது இல்லை. ஏனென்றால் கேட்பதற்கு யார் உள்ளார்கள் ? பொது மக்களுக்கு கோவிலுக்கு போகத்தான் தெரியுமே தவிர, கோவில்களின் பிண்ணனியில் யார் செயல்படுகிறார்கள் என்று தெரியாதே ?
அரசாங்கத்தின் ஒரு பொதுத்துறை நிறுவனம் எப்படி ஊழல் மிகுந்து, பலவிதமான நிர்வாக கோளாறோடு திகழ்கிறதோ, அதைப்போலவே, அரசாங்கத்தின் கைவசம் உள்ள நம் திருக்கோவிலகளின் நிலைமையும் உள்ளது. தனியார் துறை எவ்வாறு செழிக்கிறதோ, லாபம் ஈட்டுகிறதோ, அவ்வாறே மற்ற மதத்தவர்களி வழிப்பாட்டு தளங்கள் செழிக்கின்றன.
அதோடு மட்டும் இல்லை. பொதுமக்களின் பயன்பாட்டுக்கு என்று கோவில்களுக்கு அந்த காலத்தில் பலர் எழுதிக் கொடுத்த சொத்துக்களை அரசாங்கம் கையகப்படுத்துகிறது. இதையே வேற்று மதத்தவரின் ஆலய சொத்துக்களை இவ்வாறு செய்ய முடியுமா இந்த மாநிலத்தில் ? உள்ளே என்ன நடக்கிறது என்றுதான் அரசாங்கத்துக்கு தெரியுமா ?
அரசாங்க கோவில்களில் அண்ணதானம் என்கிற பெயரில் பெரும்பாலும் சுகாதாரமில்லாத வகையில்தான் உணவு தயாரிக்கப் படுகின்றது. இதனால் வசதி வாய்ப்புள்ள பலர் கோவில்களில் அண்ணதானங்களில் பங்கேற்பது இல்லை. பல கோவில்களில் தரிசனத்துக்காக வரும் பக்தர்களை காட்டிலும், தினம் இந்த உணவுக்காக வந்து சாப்பிட்டு போகும் சோம்பேறிகள்தான் அதிகம். பெரும்பாலும் இந்த அண்ணதானங்கள் செய்வதற்கு காண்டிராக்ட் தான் கொடுக்கப்படுகிறது. காண்ட்ராக்டர்கள் பெரும்பாலும் ஆளும் கட்சியை சேர்ந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள். கடனே என்றுதான் இது நடத்தப்பட்டு, பிறகு கணக்கு காட்டப்பட்டு பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. இதற்கு இடைத்தரகர்களாக பல அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள் என்று பலர் சொல்கிறார்கள்.
இப்படி பலவிதமான நிர்வாக கோளாறுகள், கமிஷன்கள், கையூட்டுகள் என நம் கோவில்கள் பல வகைகளில் சீரழிக்கப்படுகின்றன.
Thanks; Enlightened Master
பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ... |
கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.