பாஜக , காங்கிரஸ் இரண்டுக்குமே கர்நாடகா ஒரு பாடம்

  கர்நாடகாவில் நாம் தோற்றது குறித்து நான் வருந்துகிறேன். ஆனால் இது எனக்கு வியப்பளிக்கவில்லை. நாம் வெற்றி பெற்றிருந்தால்தான் அது ஆச்சர்யமாயிருக்கும்.

இந்த கர்நாடகா முடிவுகள் பாஜகவிற்கு ஓர் ஆழ்ந்த பாடத்தைக் கற்றுத் தந்திருக்கின்றன. ஒரு வகையில் அது காங்கிரஸுக்கும் பொருந்தும். நம் இருவருக்குமே பொதுவான பாடம் என்னவெனில், பொது மக்களை எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதே . எப்பொழுதாவது அவனே நந்நெறியிலிருந்து வழுவுவான் ;ஆனால், நாட்டின் பெரும் பதவியில் இருப்பவர்கள் நெறி பிறழ்வதைப் பார்த்தால் அவன் மிகவும் கோபம் கொள்வான் . இன்றைக்கு மக்களுக்கு அரசியல்வாதிகளிடம் இவ்வளவு ஒவ்வாமை இருப்பதற்கு இதுவே முக்கிய காரணம்.

ஊழல் பெங்களூருவில் சீற்றத்தை விளைவித்தால், அது தில்லியிலும் அதே விளைவை ஏற்படுத்தாதா?

உண்மையில், கர்நாடகா முடிவுகள்தான் ரயில் மற்றும் நிலக்கரி ஊழல்களில் ஒரு ஆணித்தரமான நடவடிக்கை எடுக்க வழிகோலின என்பதே என் கருத்து. , நாடாளுமன்றத்தின் பட்ஜட் கூட்டத்தொடரின் பின் பாதி முழுவதும் நடவாமல் போனால் கூட பரவாயில்லை, அவ்விரண்டு ஊழல்களைப் பற்றிய எந்த நடவடிக்கையையும் எடுப்பதாக இல்லை என்றே காங்கிரஸ் தீர்மானமாக இருந்தது.

எடியூரப்பாவை வெளியேற்றியதால்தான் நாம் கர்நாடகாவில் தோற்றோம் என்று பத்திரிக்கை அறிக்கைகள் கூறுகின்றன. பாருங்கள் எப்படி சோனியாஜி விதர்பா சிங்கின் குறைபாடுகளைப் புறக்கணித்து காங்கிரஸுக்கு சாதகமாக்கினார். பாஜக கர்நாடகாவில் ஒரு முறையான நிலைப்பாட்டை எடுத்ததாகப் பீற்றிக் கொண்டதே ! ஆனல் நடந்தது என்ன? தனது " தெற்கில் பெற்றிருந்த தனது கால்விரல் பிடியைக் கூட அது நழுவ விட்டதே!".என்றெல்லம் சிறந்த பத்திரிகையாளார் பலரும் பாஜகவை கேலி செய்திருப்பதைப் பார்க்கிறேன்.

முதலில் ஒன்றைத் தெளிவு படுத்தி விடுகிறேன். எடியூரப்பாவை பாஜக வெளியேற்ற வில்லை; அவர்தான் கஜக என்ற கோஷ்டி அரசியல் கட்சி நடத்த பாஜகவின் உறவை முறித்துக் கொண்டார். இன்னும் சொல்லப்போனால், அவர் சற்றூம் வெட்கமில்லாமல் ஊழலில் திளைக்கிறார் என்றவுடனேயே ,கட்சி அவர் மேல் உரிய திடமான நடவடிக்கை எடுத்திருந்தால் , நடப்புகள் முழுமையாக திசை மாறி வேறு மாதிரி இருந்திருக்கும்.

ஆனால், அவரது குறைகளையெல்லாம் மன்னித்து ,பல மாதங்களாக , பலவிதங்களிலும் அவரை சமாதானப்படுத்த முயற்சித்தனர். கட்சி அப்படிப்பட்ட ' லட்சியப் பிடிப்பான 'அணுகுமுறையை மேற்கொள்ளாவிட்டால் தெற்கில் இருக்கும் நமது ஒரே அரசையும் இழந்து விடுவோம் என்று அதை நியாயப்படுத்தினர்.

அதன் ஆரம்ப நாட்களில் இருந்து கட்சிக்கு ராஜஸ்தானில் ஏற்பட்ட நெருக்கடிகளை நான் அடிக்கடி இப்போதெல்லாம் எனது சகாக்களுக்கெல்லாம் சொல்லி வருகிறென். 1952-ல் முதல் நாடாளுமன்ற தேர்தல்களுக்குச் சற்று முன்னால். ஜன சங் என்ற பாஜகவின் முன்னோடி , டாக்டர் ஷ்யாம ப்ரசாத் முகர்ஜியால் 1951-ல் தோற்றுவிக்கப் பட்டது. டாக்டர் முகர்ஜி கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.

இந்தியா சுத்ந்திரம் அடைந்த முதல் பத்தாண்டுக் காலத்தில் ( 1947-57) , ராஜஸ்தான் ஜன சங்கத்தின் அலுவலகத் தொண்டன் என்ற வகையில், 1952-ல் தேர்தலில் கட்சி பெற்ற அமோக வெற்றியும் , அதன் பின்னர் அது நேர்கொண்ட நெருக்கடிகளையும் நேரில் கண்டவன் நான்.

1952- தேர்தலில் ஜன சங் , பாராளுமன்றத்தில் 3 இடங்களையும் , அனைத்து மாநில சட்டமன்றங்களில் 35 இடங்களையும் கைப்பற்றியது. மூன்று பாராளுமன்ற இடங்களில், இருவர் (டாக்டர் ஷ்யாம ப்ரசாத் முகர்ஜி , ஸ்ரீ துர்கா சரண் பானர்ஜி ) மேற்கு வங்காளத்திலிருந்தும், மற்றொருவர் ( பாரிஸ்டர் உமா ஷ்ங்கர் த்ரிவேதி) ராஜஸ்தானிலிருந்தும் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.

வென்ற மொத்த 35 மாநில சட்டமன்ற இடங்களில், மேற்கு வங்கத்திலிருந்து ஒன்பதும், ராஜஸ்தானிலிருந்து எட்டும் அடங்கும். தனது தேர்தல் அறிக்கையில் ஜன சங் ஜாகிர்தாரி முறையை ஒழிப்பதாக அறிவித்திருந்தது. ஆனால், வெற்றி பெற்ற எட்டு ராஜஸ்தான சட்ட மன்ற உறுப்பினர்களுமே ஜாகிர்தார்கள் தான் ! இதுதான் ராஜஸ்தானில் ஜன சங் நெருக்கடிகளுக்கு ஆளான காரணம்.

சட்ட மன்றம் துவங்கிய போது, காங்கிரஸ் கட்சி தனது உறுப்பினரை அவை முன்னவராக அறிவித்தது; துணைத் தலைவர் பதவியை ஜனசங்கிற்கு விட்டுக் கொடுத்தது. ஸ்ரீ லால் சிங் ஷெக்தாவத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.

இந்த முதல் கூட்டத்திலேயே காங்கிரஸ் கொண்டு வந்த மசோதாக்களில் ஒன்றுதான் ஜாகிர்தாரி முறையை ஒழிப்பது. கட்சியின் தேர்தல் அறிக்கையை நாங்கள் எங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்குக் கொண்டு வந்து, இந்த மசோதாவை நிறைவேற்ற ஒத்துழைப்பை நாடிய போது அறவே மறுத்து விட்டனர்.

நாங்கள் டார்டர் முகர்ஜியை தில்லியில் தொடர்பு கொண்டு பிரச்சினையை விளக்கினோம். அவர் தாமே ஜெய்புர் வந்து மற்ற உறுப்பினர்களுடன் பேசுவதாகச் சொன்னார். ,

அந்த நாட்களையும் , அப்போது நாங்கள் அனுபவித்த இறுக்கத்தையும் என்னால் மறக்கவே முடியாது . டாக்டர் முகர்ஜி வந்தவுடன் அது மேலும் அதிகமானது. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எட்டில் ஆறு உறுப்பினர்கள் சத்தம் போடாமல் தத்தம் தொகுத்களுக்குச் சென்று விட்டனர். டாக்டர் முகர்ஜியைச் சந்தித்த மற்ற இருவர் கட்சியின் முடிவுக்குத் தாம் கட்டுப்படுவதாகவும் ,ஆனால் ஏனைய உறுப்பினர்கள் மசோதாவை எதிர்ப்பது என்று முடிவு செய்திருப்பதாகவும் முகர்ஜியிடம் தெரிவித்தனர்.

டாக்டர் முகர்ஜி கட்சி அலுவலர்களை கடைசி முயற்சியாக உறுப்பினர்களை வற்புறுத்தி பார்க்கும் படியும் , ஒத்து வராவிட்டால் அவர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கைகளை எடுக்கும் படியும் பணித்தார்.

அது அவ்வளவு எளிதன விஷயமல்ல. பொதுச் செயலாளர் என்ற பண்டிட் தீன் தயாள் உபாத்யாவோடும் நாங்கள் விடாமல் தொடர்பில் இருந்து வந்தோம். எட்டு உறுப்பினர்களில் ஆறு பேரை கட்சியிலிருந்து வெளியேற்றூவது என்று எடுத்த முடிவை நான் மறக்கவே முடியாது. எங்களோடு இருந்த இருவரில் ஒருவர் பைரோன் சிங் ஷெகாவத். ஆவார். அவர் மும்முறை ராஜஸ்தானத்தின் முதன் மந்திரியாகவும் பின்னர் இந்திய நாட்டின் துணை ஜனதிபதியாகவும் பின்னாளில் ஆனவர். இந்த மாதிரியான கடும் நடவடிக்கை எடுக்கும் துணிச்சல் நாட்டில் எத்தனை கட்சிகளுக்கு இருக்கும் ? ஜன சங் தனது தொடக்க நிலையிலேயே இத்தகைய துணிச்சலை மெய்ப்பித்துக் காட்டியது.

மற்ற கட்சிகள் தமது உறுப்பினர்களின் அப்பட்டமான தகாத செயல்களிலிருந்து தப்பித்துக் கொள்ளும் நிகழ்வுகளை நிறையக் காட்ட முடியும். அதே சமயம், பாஜக தவறிழைக்கும் போது மக்கள் எந்த அளவுகோலைக் கொண்டு அதை மதிப்பிடுகிறார்கள் என்பதை உணர வேண்டும். அது மற்ற கட்சிகளைப் போல அல்ல என்பது ஒன்றும் வியப்பல்ல! இத்தனை வருடங்களாக நமது சாதனைகளைப் பதிவு செய்திருப்பது , மக்கள் மனதில் நம்மைப் பற்றிய எதிர்பார்ப்புகளை உயர்வாக்கியிருக்கிறது. நமது எந்தச் சிறிய பிறழ்வும் நமக்கு அதிக நஷ்டத்தை ஏற்படுத்தும். கர்நாடகா நெருக்கடியில் நமது நடத்தை எதோ ஒரு சிறிய அறிவு மயக்கம் அல்ல; அது ஒரு அப்பட்டமான , முழுமையான சந்தர்பவாத அரசியல் என்பதை நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன்.

குறுஞ்செய்தி :

'ப்யனியர்' என்னும் நாளிதழில் அதன் முன் பக்கத்தில் வந்துள்ள தலைப்புச் செய்தி. : "பிரதமருக்கு மூக்கறுப்பா? ". அது மேலும் கூறுகிறது : திருமதி சோனியா காந்தி மந்திரி சபை மாற்றியமைப்பது பற்றி முடிவு செய்ய கட்சியில் முக்கியமானவர்களைச் சந்திக்க இருக்கிறார் என்று.

அப்படியானால், தனது மந்திரி சபை பற்றி முடிவு செய்யும் உரிமையையும் பிரதமர் துறந்து விட்டாரா? பிரதமரின் இரு மந்திரிகள் நீக்கம் கூட சோனியாஜியால்தான் நிகழ்ந்தது என்று  இன்றைய பத்திரிகைக் குறிப்புகள் பொதுவாக தெரிவிக்கின்றனவே !

சுய மரியாதை என்று ஒன்று இருக்குமானால் பிரதமர் ராஜினாம செய்து விட்டு , விரைவில் பொதுத் தேர்தல்களை அறிவிப்பதுதான் முறையாகும் .

நன்றி ; எல்.கே. அத்வானி

நன்றி தமிழில்; ராஜகோபாலன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

கருவுற்றிருக்கும் போது உணவில் கவனிக்க வேண்டியவை

சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ...

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...

மிக அழகான தோல் வேண்டுமா?

மிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் உலகில் காண்பது ...