குடும்பமே லஞ்சகுற்றச்சாட்டில் சிக்கியுள்ளதற்கான ஆதாரங்கள் நிறையவே இருந்தும் , முன்னாள் ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சலை விடுவிக்கவும்முயற்சி , ஆதாரமே இல்லை என்றாலும், பா.ஜ.க., தலைவர் எனில், அவரை சிக்கவைக்கவும் சிபிஐ., முயற்சிக்கிறது,” என்று , ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் அருண்ஜெட்லி குற்றம் சுமத்தியுள்ளார்.
மத்திய புலனாய்வு நிறுவனமான, சிபிஐ.,யின் இயக்குனர் ரஞ்ஜித்சின்ஹா, டில்லியில் ஒரு பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
ரயில்வேவாரியத்தில், எலக்ட்ரிக்கல் பிரிவுக்கான உறுப்பினர் பதவிக்காக, லஞ்சம்பெற்ற வழக்கில், முன்னாள் ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சாலின் உறவினர் விஜய்சிங்லா மற்றும், தற்போது, சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள மகேஷ்குமார் உட்பட, எட்டுபேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் விசாரணை நடந்துவருகிறது.
விஜய் சிங்லா, முன்னாள் அமைச்சர் பவன்குமார் பன்சலின் உறவினரே. ஆனாலும், பன்சாலுக்கு எதிராக, எந்தவிதமான ஆதாரங்களும் கிடைக்க வில்லை. இந்த வழக்கு தொடர்பாக, நிறைய ஒலி நாடாக்கள், சிபிஐ., யால் கைப்பற்றப்பட்டு இருந்தாலும், இந்தவழக்கில் பன்சாலை ஒருகுற்றவாளி என, நிரூபிப்பது மிகவும்
கடினம்.என்று ரஞ்ஜித் சின்ஹா கூறியிருந்தார் .
இந்த பேட்டியை தொடர்ந்து டில்லியில், நேற்று பா.ஜ.க , மூத்த தலைவர்களில் ஒருவரும், ராஜ்யசபா எதிர்க் கட்சித் தலைவருமான அருண்ஜெட்லி கூறியதாவது: ரயில்வே வாரிய உறுப்பினர் பதவிக்கு லஞ்சம்வாங்கி, கையும் களவுமாக பிடிபட்டுள்ளது, முன்னாள் அமைச்சர் பவன் குமார் பன்சலின் உறவினர். இந்தவிவகாரத்தில், பன்சாலுக்கு நேரடி தொடர்புள்ளதா என, சிபிஐ., அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்த நேரத்தில், “லஞ்சவிவகாரத்தில், பன்சாலுக்கு தொடர்பில்லை’ என்று , சி.பி.ஐ., இயக்குனரே கூறினால், அவருக்குகீழ் பணியாற்றும் அதிகாரிகளின் விசாரணையில் பதிப்பை உண்டாக்கும் இது பன்சாலை தப்பிக்க வைக்கும் முயற்சி . இதை, பா.ஜ.க , கடுமையாக எதிர்க்கிறது. சிபிஐ., சுதந்திரமான அமைப்பு என்று , கூறப்படுகிறது. ஆனால், அந்த விசாரணை அமைப்பை, தங்கள் இஷ்டம்போல, காங்கிரஸ் ஆட்டிப்படைக்கிறது என்பதற்கு, மற்றொருஉதாரணம் இது. எந்தவிதமான பாரபட்சமும் இன்றி, நடு நிலையுடன் சிபிஐ., அமைப்பு செயல்படவேண்டியது மிகவும் அவசியம். நடைமுறையில், அதற்குநேர்மாறாக சிபிஐ., செயல்படுகிறது. இது துரதிருஷ்டமானது. ஆதாரங்கள் நிறையவே இருந்தும் . அமைச்சருக்கு மட்டும் தொடர்பில்லை என கூறி, பன்சாலை விடுவிக்க சிபிஐ., முயற்சிக்கிறது.
அதேநேரத்தில், ஆதாரங்கள் எதுவுமேஇல்லை என்றாலும், எதிர்க்கட்சி தலைவர்கள்மீது வழக்கு பதிவுசெய்து, சிக்கவைக்கவும், சிபிஐ., முற்படுகிறது.”பா.ஜ.,வை பழி வாங்குகிறது ‘ராஜஸ்தான் சட்ட சபை எதிர்க்கட்சி தலைவர் குலப்சந்த் கட்டாரியாவை, கொலைவழக்கில் சிக்கவைத்து குற்றப்பத்திரிகையையும், சிபிஐ., தாக்கல்செய்துள்ளது. ஒருபுறம் இப்படி வேண்டுமென்றே பழிவாங்கும் சிபிஐ., மறுபுறம் பன்சாலை தப்பிக்கவைக்க முயற்சி மேற்கொள்கிறது.இதன் மூலம், சிபிஐ., அமைப்பை, தன் விருப்பம்போல காங்கிரஸ் பயன் படுத்துவது அப்பட்டமாக தெரிகிறது.சி.பி.ஐ., அமைப்பை, சுதந்திரமாகசெயல்பட வைப்பதற்காக, மூத்த அமைச்சர்களைகொண்ட ஒருகுழுவை, மத்திய அரசு அமைத்துள்ளது. இது முழுக்கமுழுக்க, ஒரு கண்துடைப்பு நாடகம். சிபிஐ., அமைப்பை, சுதந்திரமாக செயல்படவைப்பது குறித்து, விரிவான யோசனைகளை பார்லிமென்ட் தேர்வுக்குழுவிடம் பா.ஜ., ஏற்கனவே அளித்துள்ளது.ஆனாலும், அதை மூடிமறைக்க பார்க்கிறது காங்கிரஸ். சிபிஐ., என்ற அமைப்பை காங்கிரஸ் எப்படியெல்லாம் தவறாககையாள்கிறது என்பதை, மக்கள் பார்த்து கொண்டிருக்கின்றனர்.என்று அருண் ஜெட்லி கூறினார்.
திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ... |
முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ... |
கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.