ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, உணவுப்பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றுவதில் அரைமனதுடன் செயல்படுவதாக பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் குற்றம் சுமத்தியுள்ளார்.
உணவு பாதுகாப்பு சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற பாஜக முட்டுக்கட்டையாக இருப்பதாக ராகுல்காந்தி குறை கூறியிருந்தார். இதற்குப்பதில் தரும் வகையில், சில திருத்தங்களுடன் இந்தசட்டத்தை நிறைவேற்ற ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்று பா.ஜ.க., தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள , பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் , “”உணவு பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றுவதில் மத்தியஅரசு அரைமனதுடன் செயல்படுகிறது. இது குறித்து பாஜக முட்டுக்கட்டை போடுவதாக ராகுல்காந்தி கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது. காங்கிரஸ்க்கு ஏழைமக்கள் மீது உண்மையிலேயே அக்கரை இருந்தால், 90 சதவீத மக்கள் பயனடையும்வகையில் சத்தீஷ்கர் மாநிலத்தில் கொண்டுவரப்பட்டுள்ளதை போன்ற உணவுப்பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வரவேண்டும். மக்களவைத் தேர்தலில் ஆதாயம் தேடுவதற்காக இந்தசட்டத்தை நிறைவேற்ற முனைப்பு காட்டிவருகிறது” என்றார்.
மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ... |
கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ... |
சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.