தேசிய மனிதஉரிமைகள் ஆணையத்தின் தலைவராக உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி ஜோசப்பை நியமிக்க பாஜக. கடும்எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக பதவி வகித்த நீதிபதி மாத்தூர் ஜனவரிமாதம் ஓய்வுபெற்றதை தொடர்ந்து அந்தப்பதவி காலியாக இருந்தது. இந்தபதவிக்கு யாரைநியமிப்பது என்பது குறித்து ஆலோசிக்க பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நேற்றுமுன்தினம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர்களான சுஷ்மாஸ்வராஜ், அருண்ஜெட்லி, சபாநாயகர் மீராகுமார், உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே, ராஜ்ய சபா துணைத் தலைவர் பிஜே. குரியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் நீதிபதி ஜோசப்பை நியமிக்க சுஷ்மாஸ்வராஜூம், அருண்ஜெட்லியும் கடும் எதிர்ப்புதெரிவித்து வெளிநடப்பு செய்தனர். இருப்பினும் பெரும்பான்மை உறுப்பினர்களின் முடிவின் அடிப்படையில் நீதிபதி ஜோசப்பையே மனித உரிமை ஆணைய தலைவராக நியமிப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ... |
முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ... |
ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.