ஐ.மு., கூட்டணி அரசு ஊழலில் திளைப்பதாக குஜராத் முதல்வர் நரேந்திரமோடி குற்றம் சுமத்தியுள்ளார் .
ஆமதாபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியதாவது; 9
ஆண்டுகால ஐ.மு., கூட்டணி ஆட்சி என்றகோப்பை முழுவதும் ஊழலால் நிரம்பிவழிகிறது. அரசின் மீதான நம்பகத் தன்மை கேள்விக் குறியாகியுள்ளது.
காங்கிரஸ் கூட்டணியின் மோசமான ஆட்சிமுறையால் கொள்கைகள் முடக்கி வைக்கப்பட்டுள்ள நிலையை நாடு சந்தித்துவருகிறது. அரசு அமைப்புகளை தனக்கு பிடிக்காதவர்களை பழிவாங்குவதற்காக மத்திய அரசு பயன் படுத்துகிறது.
குஜராத்தில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப்பணிகள் குறித்து இன்ஃபோசிஸ் நிறுவன இணைத்தலைவர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் புகழ்ந்து பேசியதற்காக ரூ.500 கோடி வருமானவரியை செலுத்துமாறு அந்தா நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சாமானியமக்களும் தங்களின் குறைகளை தெரிவிப்பதற்கான வாய்ப்பை சமூக வலைத் தளங்கள் அளித்துள்ளன. சமூக வலைத்தளங்களின் மீது மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதிக்கக் கூடாது. இதை போன்ற தொழில்நுட்ப வளர்ச்சியை ஏற்றுக்கொள்ளவேண்டும்.
ஆட்சிமுறையும், தொழில்நுட்பமும் ஒன்றையொன்று ஏற்றுக் கொள்ளாவிட்டால், மிகப் பெரிய இடைவெளி உருவாகும். . ஜனநாயகத்தை வலுப்படுத்த ஆரோக்கியமான விமர்சனங்கள் அவசியம். அதை வரவேற்கவேண்டும் என்றார்.
கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.