ஸ்ரீரங்கப்பட்டணத்தில் முஸ்லீம் பல்கலைக் கழகம் அமைக்க பா.ஜ.க., எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மத்திய சிறுபான்மையினர் நலத்துறைசார்பில் முஸ்லீம்கள் அதிகம்வசிக்கும் பகுதிகளில் மத்திய பல்கலைக்கழகங்களை அமைக்க
முடிவுசெய்யப்பட்டுள்ளது. இதற்க்கு கர்நாடக பாஜக கடும் எதிர்ப்புதெரிவித்துள்ளது.
இது குறித்து பெங்களூரில் கர்நாடக பாஜக செய்தித் தொடர்பாளரும், எம்எல்சி.யுமான ஜி.மதுசூதன்,செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :
சுதந்திரத்திற்கு முன்பு இந்து, முஸ்லீம்களை பிளவுப் படுத்தும் நோக்கில், ஆங்கிலேயர்களின் பேராதரவுடன் அலிகார்க் பல்கலைக் கழகம் தொடங்கப்பட்டது. இந்த பல்கலைக்கழகத்தில் படித்த முன்னாள் மாணவர்கள்தான் சிமி என்ற பயங்கரவாத இயக்கத்தைதொடங்கி, பல்வேறு பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டனர்.
முஸ்லீம் மாணவர்கள் படிப்பதற்கு ஏராளமான பல்கலைக் கழகங்கள் இருக்கும் போது, முஸ்லீம்களுக்கு தனிபல்கலைக்கழகம் தொடங்குவது தேவையற்றது. இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. மத பிரிவினைவாதத்திற்கு இது தூண்டுகோலாக அமையும் . ஸ்ரீரங்கப்பட்டணாவில் முஸ்லீம் பல்கலைக் கழகம் தொடங்க ஏற்கெனவே எதிர்ப்புதெரிவித்திருந்தோம். பா.ஜ.க அரசும் அப்போது எதிர்ப்புதெரிவித்திருந்தது. ஆட்சி மாறியுள்ளநிலையில், மீண்டும் பல்கலைக் கழகங்களை தொடங்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது சரியல்ல.
மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கில் மதஅடிப்படையிலான பல்கலைக் கழகங்களை மத்திய அரசுதொடங்குகிறது. இந்தியா மதசார்பற்றநாடு.இங்கு மதவாதத்திற்கு இடமளிக்கக் கூடாது. மத நல்லிணக்கம், நாட்டின் ஒற்றுமைக்கு எதிராக முஸ்லீம் பல்கலைக்கழகம்தொடங்க உத்தரவிட்டுள்ள மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ரகுமான் கான், உடனடியாக ராஜிநாமா செய்யவேண்டும். இல்லையென்றால், அவரை பதவியிலிருந்து நீக்கவேண்டும். எங்கள் கோரிக்கைக்கு செவிசாய்க்காத நிலையில் போராட்டம்நடத்துவோம் என்றார்.
கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ... |
மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ... |
இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ... |
Leave a Reply
You must be logged in to post a comment.