தமிழகத்திற்கு 134 டிஎம்சி. தண்ணீர் திறந்துவிட முடியாது

  தமிழகத்திற்கு 134 டிஎம்சி. தண்ணீர் திறந்துவிட முடியாது காவிரிநீர் பிரச்சனை தொடர்பாக, காவிரி மேலாண்மை பொறுப்பு குழு வழிகாட்டுதல்கள் குறித்துவிவாதிக்க, பெங்களூருவில் அனைத்து கட்சியினர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், கர்நாடகா முதல்வர் தலைமையில் நடந்தது.கூட்டமுடிவில் தற்போதுள்ள நிலையில் இறுதித்தீர்ப்பில்

கூறியுள்ளபடி தமிழகத்திற்கு 134 டிஎம்சி. தண்ணீர் திறந்துவிட முடியாது என்றும் காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பை மறு ஆய்வுசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். இந்தஅறிவிப்பு, காவிரிடெல்டா விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காவிரி நடுவர் மன்ற இறுதிதீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிட்ட பிறகு, அந்த தீர்ப்பின் படி தமிழகத்திற்கு தண்ணீர்திறக்காமல் கர்நாடக அரசு வழக்கம் போல் ஜால் ஜாப்பு சொல்லிவருகிறது. இதையடுத்து தமிழகத்திற்கு ஏற்பட்டுட்டுள்ள நஷ்டத்திற்கு இழப்பீடுவழங்க வேண்டும் என்றுகோரி, தமிழக அரசு சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்நிலையில் காவிரிபிரச்சினை குறித்து விவாதிப்பதற்காக பெங்களூரில் தலைமை செயலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு பிறகு நிருபர்களை சந்தித்த முதல்வர் சித்தராமையா,”காவிரிபிரச்சனை குறித்து நடைபெற்ற அனைத்துக் கட்சிகூட்டத்தில் அனைத்துகட்சி தலைவர்களின் கருத்துக்களும் கேட்டறியப்பட்டது. அதன்படி, காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பை மறு ஆய்வுசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தீர்ப்புவெளியான 5 ஆண்டுகளுக்கு பிறகுதான் தீர்ப்பை மறு ஆய்வு செய்யமுடியும்.

2007-ல் தீர்ப்புவெளியிடப்பட்டதால், இப்போது மறு ஆய்வுசெய்ய முடியும். தற்போதுள்ள நிலையில் இறுதித்தீர்ப்பில் கூறியுள்ளபடி தமிழகத்திற்கு 134 டிஎம்சி. தண்ணீர் திறந்துவிட முடியாது. மழைபெய்தாலும் 134 டிஎம்சி. தண்ணீருக்குப்பதில் 97.82 டிஎம்சி. மட்டும்தான் திறக்கமுடியும். கர்நாடக விவசாயிகளின் நலன்கருதி இந்தமுடிவு எடுக்கப்பட்டுள்ளது.” என்று அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

தலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்

முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ...

வெங்காயத்தின் மருத்துவ நன்மை

பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ...

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...