நரேந்திர மோடிக்கு அமெரிக்க விசா மறுக்கப் படுகிற விவகாரம் குறித்து, அமெரிக்க பாராளுமன்றகுழுவில் காரசாரமாக விவாதிக்கப்பட்டது. இதில் நரேந்திர மோடிக்கு ஆதரவாக பெண் எம் பி. மற்றும் பலர் பேசியுள்ளனர்.
செல்வாக்குமிக்க எதிர்க்கட்சி (குடியரசு கட்சி) பெண் எம்.பி. சிதியாலும்மிஸ் இந்தப் பிரச்சினையை எழுப்பினார்.மோடிக்கு விசாமறுப்பது ஏன் என ஜனாதிபதி ஒபாமா அரசுக்கு கேள்வி விடுத்தார்.
இந்த விவாதத்தின் போது சிதியா லும்மிஸ் கூறியதாவது:–குஜராத் முதல்மந்திரி நரேந்திர மோடிக்கு அமெரிக்கா தொடர்ந்து விசாஅளிக்க மறுத்துவருவது கவலை அளிக்கிறது. குஜராத்தில் நமக்கு பிரமாண்டமான போர்டுமோட்டார் கம்பெனி அமைந்துள்ளது. மிகப் பெரிய அளவிலான டாடாமோட்டார் வாகன அசெம்பிளி தொழிற்சாலை உள்ளது.அங்கு நடந்த கலவரங்களின் போது உரியநேரத்தில் உரியநடவடிக்கை எடுக்க அவர் தவறிவிட்டார் என்ற குற்றச்சாட்டு ஒருதரப்பில் எழுந்தது. அந்தக் கலவரங்களுக்கு அவர் பொறுப்பாகமாட்டார்.
குஜராத் இன மோதல்கள் தொடர்பாக எத்தனையோ நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதும் கூட, அவர் மீது இந்திய நீதிபதிகள் எந்த குற்றமும் காணவில்லை.இந்தியாவில் இதுதொடர்பான வழக்கு விசாரணை நடக்கும், நடக்கும், நடந்து கொண்டே இருக்கும். 10 ஆண்டுகளுக்குமேலாக சட்டப் போராட்டங்கள் நடந்த போதும், நரேந்திர மோடி எந்த தப்பும் செய்ததாக கண்டறியப் படவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ... |
பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.