மூன்றாவது அணி அதிகார பசி நிறைந்த நரி குணம் படைத்த காக்கை கூட்டங்களின் சங்கமமே. பிரதமர் பதவி என்ற குறிக்கோளுடன் கூடும் இந்த காக்கைகளிடம் இருப்பது என்னவோ அந்த பதவியை எப்படி அபகரிப்பது என்ற நரிக்குணமே. இதில் நிதிஸ்சோ , மம்தாவோ , முலாயமோ யாரும் விதிவிலக்கல்ல.
இந்திய தேர்தல் திருவிழாக்களில் கொள்கை கோட்ப்பாடுகள் அற்ற மூன்றாவது அணிகள் திடீர் திடீர் என முளைப்பதும் தேர்தல் நெருங்க நெருங்க வந்த வழியே காணாமல் போய்விடுவதும் வாடிக்கை. இதில் இந்த முறை புதிதாக மம்தா பானர்ஜியின் வடிவில் மூன்றாவது அணி முளைத்துள்ளது . வலுவான பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணிகளில் ஒத்த கருத்துடன் முழுமையாக நீண்ட நாள் நீடித்திடாத, மூர்க்கத்தனமான கோபத்துடனேயே வெளியேறி பழக்கப் பட்ட இந்த மம்தா பானர்ஜிதான் மூன்றாவது அணியை வடிவமைக்கிறார் என்பது வேடிக்கையாகவே இருக்கிறது .
இந்திய அரசியல் வரலாற்றில் மூன்றாவது அணி என்பது தோல்வியடைந்த ஒன்றே. அப்படியே அமைந்தாலும். பாஜக அல்லது காங்கிரஸ்ஸின் முட்டு இல்லாமல் இவர்களது அணி முழுமை பெறாது என்பதே வரலாறு நமக்கு கூறும் பாடம். 1990ம் ஆண்டு வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணிக்கு (National Front) முட்டுக்கொடுத்தது பாரதிய ஜனதா கட்சியே. அதனை தொடர்ந்து வந்த சந்திர சேகர் அரசுக்கும், 1996 ம் வருட தேவே கெளட அரசுக்கும் 1997ம் வருட இந்தர் குமார் குஜ்ரால் அரசுக்கும் முட்டு கொடுத்தது காங்கிரஸ் கட்சியே. ஆனால் இந்த கூட்டணிகள் அனைத்துமே அல்ப்ப ஆயுளுடனே முடிந்தது என்பதே வரலாறு.
இந்தியாவில் கூட்டணி ஆட்சி என்பது ஒரு அரசியல் மறுமலர்ச்சியே. மத்திய அமைச்சரவையில் மாநில கட்சிகளின் பங்கேற்ப்பு என்பது கூட்டாட்சியின் செலுமையையே காட்டுகிறது. இருப்பினும் குறுகிய கொள்கை கோட்பாடுகளை மட்டுமே உடைய இந்த மாநில கட்சிகள் பரந்த பாரதத்தை ஆள பிரதமர் பதவியை குறி வைப்பது துரதிருஷ்டமே. மத்திய இரயில்வே அமைச்சராக இருந்த மம்தா பானர்ஜி மேற்குவங்க மாநில இரயில்வே துறை அமைச்சராகவே செயல்பட்டார் அந்த அளவுக்கு பெரும்பாலான இரயில்வே திட்டங்கள் மேற்குவங்கம் மாநிலத்தையே ஆக்கிரமித்தன. இந்நிலையில் இவர்கள் எல்லாம் பாரத பிரதமராக ஆனால் முகமது பின் துக்ளக்கை போன்று தலைநகரத்தை டெல்லியில் இருந்து கொல்கத்தாவுக்கோ, லக்னோவுக்கோ, பாட்னாவுக்கோ ஏன் மீண்டும் தேவகிரிக்கோ மாற்றத்தான் முயற்சி செய்வார்களே தவிர ஒன்று பட்ட பாரதத்தின் வளர்ச்சியை பற்றி யோசிப்பார்களா என்பது ஐயமே!.
தமிழ்தாமரை V.M.,வெங்கடேஷ்
கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ... |
அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ... |
கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.