காங்கிரசுக்கு எதிரான போராட்டத்தை ஐக்கிய ஜனதா தளம் பலவீனப் படுத்திவிட்டது என்று பாஜக. தலைவர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது; ஐக்கிய ஜனதா தளத்துடன் 17
ஆண்டுகள் உணர்வு பூர்வமான கூட்டணி வைத்திருந்தோம். அவர்களை எங்கள் இளையசகோதர கட்சியாகதான் நடத்தினோம்.
பாஜக. கூட்டணியில் இருந்து அவர்கள் வெளியேறியது மிகுந்தவருத்தத்தை தருகிறது. பரஸ்பரநம்பிக்கை மற்றும் புரிந்துணர்வு அடிப்படையில் கூட்டணி அமைகிறது. ஆனால் ஒருகட்சி வெளியேறுவது மிகுந்தவேதனையை தருகிறது. எங்களுக்கு துரோகம் இழைக்கப்படலாம். ஆனால் நாங்கள் யாருக்கும் துரோகம் இழைக்கமாட்டோம்.
தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து ஐக்கிய ஜனதா தளம் வெளியேறியதால், காங்கிரஸ் கட்சிக்கு எதிரானபோராட்டம் வலு குறைந்துவிடும். இதன் மூலம் காங்கிரஸ் ஆட்சியில் இருந்து எவ்வாறு நாட்டை விடுவிக்கமுடியும்.
கடந்த 2002-ம் ஆண்டு குஜராத்தில் நிகழ்ந்த கலவரங்களால் நரேந்திரமோடியை மதவாதி என கருதினால், சுதந்திரத்துக்கு பிறகு 50 ஆண்டுகள் நடைபெற்ற காங்கிரஸ்ஆட்சியில் பல கலவரங்கள் நிகழ்ந்தன. கடந்த 2000-ம் ஆண்டில் பிகாரில் பாஜக. தான் பெரியகட்சியாக திகழ்ந்தது. பாஜக.வுக்கு 67 தொகுதிகளும், ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு வெறும் 34 தொகுதிகளே கிடைத்தன. அப்படியும் முதல்வர்பதவியை ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்குதான் விட்டுத்தந்தோம்.
ஜனநாயக நாட்டில் மக்களின் உணர்வுகளை மதிக்காமல் செயல்படும்கட்சி நீண்ட நாள் நீடிக்காது என்றார் ராஜ்நாத்சிங்.
மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ... |
விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ... |
கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.