பலநாள் குடைச்சல் ஒருவழியாக வெளியேறிவிட்டது

 பலநாள் குடைச்சல் ஒருவழியாக வெளியேறிவிட்டது . பொறமை , வஞ்சனை நிரம்பியவர்கள் எத்தனை காலத்துக்குத்தான் நண்பனாக நடிக்க முடியும் வெளியேறிவிட்டார்கள் . நிதிஷ் குமாரின் வெளியேற்றம் பாஜக.,விற்கு சிறு பின்னடைவுதான். ஆனால் கடந்த நான்கு

வருடங்களாக பாஜக.,வின் காங்கிரஸ்க்கு எதிரான பல போராட்டங்களை அவ்வப்போது மோடிக்கு எதிராக பேசி திசை திருப்பி பிசுபிசுக்க வைத்த இந்த நிதிஷ்கள் என்றோ வெளியேற்றப்பட வேண்டியவர்கள் என்பதே உண்மை.

நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் பாஜக.,வின் 17 வருட நண்பன் என்று கூறுவதை விட சகோதரன் என்று கூறுவதே பொருந்தும். பாரதிய ஜனதா அவர்களை சகோதரனாக கருதியதால் தான் 2002 ம் ஆண்டு 67 எம்.எல்.ஏ .,க்களை வென்றபோதும் முதல்வர் பதவிக்கு போட்டியிடாமல் 34 இடங்களை வென்ற ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ் குமாரை முதல்வராக முன்னிலை படுத்தியது .

எப்படி 34 எம்.எல்.ஏ க்களை வைத்து முதல்வர் ஆனாரோ அதேபோன்று 20, 25 எம்.பி.,க்களை வைத்து பிரதமராகலாம் என்று கனவுகாண ஆரம்பித்துவிட்டார். இந்நிலையில் தான் மோடியின் விஸ்வரூபம் எங்கே தன் கனவில் மண்ணை அள்ளிப்போட்டு விடுமோ என்று அஞ்சினார் , பொறமை கொண்டார் , எரிச்சல் கொண்டார், இறுதியாக பொறுக்கமுடியாமல் பாஜக.,வில் இருந்து விலகி திடீர் என மதசார்பற்றவராகவும் மாறிவிட்டார்.

நிதிஷ் குமார் மோடியை மதவாதி என்று எந்த வாயால் சொல்கிறாரோ அதே வாயால்தான் நரேந்திர மோடியின் சேவை குஜராத்தையும் தாண்டி தேவை என்று கூறினார். 2002 ம் ஆண்டு குஜராத் கலவரத்துக்கு பிறகு நடந்த ஒரு ரயில்வே விழாவில், மோடி முன்னிலையில், நிதிஷ்குமார் பேசியதாவது : "நரேந்திர மோடி.எதிர் காலத்தில் குஜராத்திற்கு வெளியே ஒரு தலைவராக உருவாகக்கூடியவர் நீண்ட நாட்களுக்கு அவர், குஜராத்திற்கு உள்ளேயே இருக்க முடியாது என்பதை என்னால் உறுதியாக கூறமுடியும். அவரது சேவை நாடு முழுமைக்கும் தேவை. குஜராத்தில் ஏராளமான வளர்ச்சிபணிகளை செய்துள்ள மோடியை நான் பாராட்டுகிறேன். ஆனால், குஜராத்திற்குவெளியே அவரைப் பற்றி, தவறான கருத்து பரவி உள்ளது. குஜராத்தில் நடந்துள்ள வளர்ச்சிப்பணிகள் பற்றி, வெளியே அதிகம் தெரியவில்லை. அவற்றை சரியாக விளம்பரப்படுத்த வேண்டும். மோடியை நான் மீண்டும் பாராட்டுகிறேன்". என்று கூறுகிறார்.

மேலும் 2004 லோக்சபாதேர்தல் முடிவுகள் வெளியானபோது ஒரு மூத்த ஊடகவியலாளரிடம் தெரிவித்த கருத்துகள் இது.."பாஜக.,வின் புதிய முகம் நரேந்திர மோடிதான்..அவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இருந்து வந்தவர். .அவரை ஒரு முறை நேரில் சந்தித்தால் அவர்மீது ஈர்ப்பு உள்ளவராக மாறி விடுவீர்கள்… மிகவும் எளிமையான குடும்பத்தில் இருந்துவந்தவர்… நான் அவரது ரசிகனும் கூட என்கிறார்.

ஆகமொத்தத்தில் நிதிஷ் குமாரின் கூற்றுப்படி நரேந்திர மோடி குஜராத்துக்கு வெளியே வந்துவிட்டார். நிதிஸ் குமாரின் விருப்பத்தையும் கிட்டத்தட்ட நிறைவேற்றவும் போகிறார். ஆனால் தன் விருப்பத்தையே , தன் சொல்லையே எதிர்க்கும் நிதிஷின் செயல் ஒரு வேடிக்கையே பாஜக.,வில் இருந்து வெளியேறி விட்டதால் இவரை மதசார்பற்றவர் என்று ஆராதிக்கிறது காங்கிரஸ். காங்கிரஸ்ஸின் ஆதரவை பெற்றுவிட்டதால் இவரை எதிர்கால ஊழல்வாதி என்றே நாம் ஆராதிபோம்

தமிழ்தாமரை V.M.,வெங்கடேஷ்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...

கர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது?

முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ...

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...