பா.ஜ.க மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-
உத்தராகண்டில் வரலாறுகாணாத இயற்கை சீற்றத்தால் உண்டான
பேரழிவுகாரணமாக நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர், ஆயிரக்கணக்கான மக்கள் உரிய உதவி கிடைக்கப்பெறாமல் பரிதவித்து வருகின்றனர்.
பாஜக.,வின் தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில்சென்று பார்வையிட்டு, தேசியபேரிடராக இதை உடனே அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தேசியபேரிடர் ஏற்பட்டுள்ள இந்த சூழ்நிலையை கருத்தில்கொண்டு பாஜக., சார்பில் நடக்கவிருந்த மத்திய அரசுக்கு எதிரான சிறைநிரப்பும் போராட்டத்தை ஒத்திவைக்க கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் தற்போது கட்சிதொண்டர்கள் அனைவரும் சேவைமனப்பான்மையுடன் பேரிடரால் சொல்லொண்ணா துயரங்களுக்கு ஆட்பட்டுள்ள மக்களுக்கு உதவிக்கரம்நீட்டவும், நிதி உதவி அளிக்கவும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த அசாதாரண சூழ்நிலையை கருத்தில்கொண்டு, தமிழகத்தில் ஜுன்28ல் நடக்கவிருந்த, மத்திய அரசுக்கு எதிரான சிறைநிரப்பும் போராட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. அதே நாளில் தமிழக பாஜக.,வினர் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துயர்துடைக்க மக்களிடம் நிதிவசூல் செய்ய வேண்டுமெனவும் தங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்ய தங்களை அர்ப்பணித்துக் கொள்ளவேண்டும் எனவும் கூறியுள்ளார்.
உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ... |
குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ... |
உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.