காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளால் தனித்துவிடப்பட்ட தேமுதிக வருகிற பாராளுமன்ற தேர்தலில் பாஜக.,வுடன் கூட்டணி அமைக்கவேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இதுகுறித்து பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவது:
பா.ஜ.க.,வுடன் கூட்டணி அமைப்பது குறித்து தேமுதிக. முடிவு எடுத்தால் நாட்டின் நலன்கருதி அதை கருத்தில்கொள்வோம். வரும் பாராளுமன்ற தேர்தலில் யார் காங்கிரசோடு கூட்டணிஅமைத்தாலும் அது தமிழர்களுக்குசெய்யும் துரோகம் ஆகும். திமுக. 2004 முதல் 2013 தொடக்கம்வரை மத்திய காங்கிரஸ் கூட்டணியில் அங்கம்வகித்து, ஆட்சியில் பங்குபெற்று இருந்தது. அந்த காலகட்டத்தில் இலங்கை தமிழர்களின் பேரழிவுக்கு காரணமாக இருந்ததை யாராலும்மறைக்க முடியாது.
காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகுவதற்கும் இலங்கை பிரச்சினையைத் தான் திமுக. காரணம்காட்டியது. இப்போது ராஜ்யசபா தேர்தலில் காங்கிரசின் வாக்குகளைபெற்றதை ஒரு பொருட்டாக கருதவில்லை. ஆனால் வருகிறதேர்தலில் திமுக. காங்கிரசோடு கைகோர்த்தால் வரலாறுமன்னிக்காது.
மத்தியில் ஆளும் இந்த காங்கிரஸ் வீழ்வதற்கு ஊழல், விலைவாசி உயர்வு, தவறானபொருளாதார கொள்கைகள் என்று பலகாரணங்கள் இருக்கலாம். ஆனால் தமிழகத்தை பொறுத்த வரை இலங்கை தமிழர்களை அழித்த காங்கிரசுக்கு பாடம்புகட்ட வேண்டும் என கருதுகிறேன்.
காங்கிரசுடன் கூட்டணியமைக்கும் எவராக இருந்தாலும் தமிழ் இன துரோகிகளாகவே கருதப் படுவார்கள். காங்கிரஸ் தேமுதிக.வை ஏமாற்றியது எதிர்பார்த்ததுதான். நாட்டையே ஏமாற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இது புதியவிசயம் அல்ல. என்னை பொறுத்தவரை தேமுதிக. தனித்து விடப்பட்டதாக கருதவில்லை.
காங்கிரசை அகற்றுவதில் தேமுதிக.வுக்கு மிகமுக்கிய பொறுப்பு இருக்கிறது. அதுபற்றி அவர்கள் சிந்திப்பார்கள் என கருதுகிறேன். நாட்டின் நலன்கருதியும், செய்த துரோகத்துக்காகவும் தேமுதிக. சரியானமுடிவு எடுத்து காங்கிரசை வீழ்த்தவேண்டும்
என்று அவர் கூறினார்
ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ... |
சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ... |
இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.