உத்தரகாண்ட் வெள்ளப் பேரழிவை தொடர்ந்து சுமார் 10 ஆயிரம் ராணுவவீரர்கள் அங்கு முகாமிட்டு மீட்புப்பணிகளை செய்துவருகிறார்கள். மீட்புப் பணிகளை இராணுவம் மிக வேகமாக துரிதபடுத்தியுமே அதை செய்து முடிப்பதற்கு சுமார் 16 நாட்கள் ஆகிவிட்டது. மீட்புப்பணிகளில் உத்தரகாண்ட் மாநில ஆளும் காங்கிரஸ் அரசு மிகவும் மெத்தனமாக இருந்ததே இதற்குகாரணம் என்று புகார்கள் வந்துள்ளன.
முதல்வர் விஜய் பகுகுணா பேரழிவு ஏற்பட்டதும் விரைந்து செயல்படவில்லை . மத்திய அரசும் பெரிதாக அவரை கண்டுகொள்ளவில்லை. பாஜக. மூத்த தலைவர்கள் எச்சரிக்கை விடுத்ததாலும், நரேந்திர மோடி நேரடியாக கலத்தில் இறங்கியதாலுமே விழித்து கொண்ட காங்கிரஸ் அரசு 4 நாட்கள் கழித்து மெதுவாக நிவாரண பணிகளை தொடங்கியது.
குஜராத் முதல்மந்திரி நரேந்திர மோடி உத்தரகாண்ட் பேரழிவுபற்றி அறிந்ததும் உடனடியாக அந்த மாநிலதலைநகர் டேராடூனுக்கு சென்று முகாமிட்டு தன்மாநிலத்தைச் சேர்ந்த 15 ஆயிரம் பக்தர்களை மீட்டு அழைத்துசென்றார். இரண்டே நாளில் அவர் அந்த மீட்புப்பணியை முடித்துவிட்டார்.
அதன்பிறகும் கூட உத்தரகாண்ட் முதல்வர் விஜய்பகுகுணா வேகம் காட்டவில்லை என்ற அதிருப்தி ஏற்பட்டுள்ளது. மீட்புப்பணிகளை சரியாக செய்யாததால் உத்தரகாண்ட் மாநில அரசை டிஸ்மிஸ் செய்யவேண்டும் என பாஜக. மூத்த தலைவர்களில் ஒருவரான சுஷ்மாசுவராஜ் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் விஜய் பகுகுணா மீது உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் கட்சி யினரும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். பேரழிவு மீட்புபணிகளை திட்டமிட்டு செய்யதெரியவில்லை என அவர்கள் பகுகுணாவை குறைகூற தொடங்கியுள்ளனர்.
விஜய் பகுகுணா மிக மெல்ல செயல்படுவதாகவும் , உயிரிழந்தவர்கள் குறித்து எதையும் சொல்ல தெரியவில்லை என்றும் விஜய் பகுகுணா மீது அவர்கள் குறை கூறியுள்ளனர். .
மத்திய நீர் வளத்துறை மந்திரி ஹரீஸ்ராவத் உத்தரகாண்ட் முதல்வர் விஜய் பகுகுணாவை கடுமையாக விமர்சித்துவருகிறார். இது குறித்து அவர் சோனியாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ... |
நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ... |
மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.