உணவு பாதுகாப்பு மசோதா தொடர்பாக அவசரசட்டம் கொண்டுவந்திருப்பது, அவசரமாக அரங்கேற்றப்பட்ட அரசியல்நாடகம் என பா.ஜ.க தலைவர் ராஜ்நாத்சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறியதாவது : உணவுப்பாதுகாப்பு மசோதா மிகவும் முக்கியமான ஒன்று. இது நாடாளுமன்றத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்படவேண்டிய விஷயமாகும். ஆனால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, விவாதமின்றி குறுக்குவழியில் அவசரச்சட்டம் மூலம் இந்த மசோதாவை நிறைவேற்ற பார்க்கிறது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சிலமாதங்களே உள்ளன. எனவே ஐ.மு., கூட்டணி அரசு, இலவச திட்டங்களை அறிவித்துவருகிறது. அந்த திட்டங்களில் ஒன்றுதான் உணவுப்பாதுகாப்பு மசோதா. அதை அவசரசட்டம் மூலம் கொண்டு வந்துள்ளனர். எனவே, இந்தமசோதா அவசரமாக அரங்கேற்றப்பட்ட அரசியல் நாடகமாகும்.
இந்தமசோதா குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த பா.ஜ.க ஒருபோதும் தடையாக இருந்தது கிடையாது. இந்தமசோதாவில் சில ஓட்டைகள் உள்ளன. எனவே சிலமாற்றங்களுடன் இந்த மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என்றுதான் நாங்கள் விரும்புகிறோம். இதன் மீது கண்டிப்பாக விவாதம் நடத்தப்படவேண்டும் என்றார்.
இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ... |
கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ... |
நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.