பா.ஜ.க., மூத்த தலைவர் அத்வானிக்கும், நரேந்திரமோடிக்கும் உள்ள உறவு, தந்தை, மகன்போன்ற உறவு என்றும் உணவுபாதுகாப்பு சட்டம் உள்நோக்கம் கொண்டது என்றும் பா.ஜ.க., தேசியசெயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கருத்து தெரிவித்துள்ளார்.
இல.கணேசன் நிருபர்களிடம் இது குறித்து மேலும் கூறியதாவது : மத்திய அரசு, அவசர, அவசரமாக கொண்டுவர முயற்சிக்கும், உணவுபாதுகாப்பு சட்டம் உள்நோக்கம் கொண்டது. அரசுகஜானா பணத்தில் காங்கிரஸ் அரசு குறைந்த விலையில் ஏழைகளுக்கு தானிங்கள் வழங்குது போல் வழங்கி, இத்திட்டம், தங்களால் கொண்டுவரப்பட்டது என கூறி மக்களிடம் ஓட்டுபெற்று மீண்டும் ஆட்சியமைக்க முயல்வதால் இத்திட்டத்தை பா.ஜ.க., எதிர்க்கிறது. லாபத்தில் இயங்கும் என்.எல்.சி. நிறுவனத்தின் பங்குகளில் ஐந்து சதவீதத்தை மத்திய அரசு விற்க விரும்புகிறது. இதை தனியாருக்கு விற்பதைவிட தமிழக அரசுக்கு விற்றால் பா.ஜ.க வரவேற்கும். ஏன்? எனில், தமிழக அரசுக்குவிற்றால் அதில் கிடைக்கும் லாபம் பொதுமக்கள் நலனுக்குசெல்லும்.
அத்வானிக்கும், நரேந்திர மோடிக்கும் இடையேயான உறவு தந்தை, மகன் உறவு போன்றது. தந்தையிடம் உங்கள் மகன் உங்களைவிட சிறந்தவராக உள்ளார் என்றால், தந்தை கவலையடைய மாட்டார். மகிழ்ச்சிதான் அடைவார். அது போன்றவர் அத்வானி. ஏழை கிறிஸ்தவ, இஸ்லாமிய மாணவர்கள் கல்விசெலவை மத்திய அரசே மொத்தமாக ஏற்றுக்கொள்வது போல், இந்து ஏழை மாணவர்களின் கல்விசெலவை அரசே முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இதற்காக, கடந்த நான்கு வருடங்களாக பா.ஜ.க., போராடிவருகிறது. தமிழகத்தில் பா.ஜ.க., தனியாக போட்டியிட்டு மூன்று எம்.பி., சீட்டுகளை பெறுவதைவிட, கூட்டணியமைத்து 30 எம்.பி.,க்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்குபெறுவதை முக்கியமாக கருதுகிறோம். என்று இல. கணேசன் தெரிவித்தார்.
செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ... |
பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ... |
Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ... |
Leave a Reply
You must be logged in to post a comment.