அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்க்காக அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை விஸ்வஹிந்து பரிஷத் (வி.எச்.பி) திரட்டுகிறது. ஆதரவு திரட்டும்பணி இந்த ஆண்டு டிசம்பருக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து கட்சிகளைச்சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் இம்மாதம் 28ம் தேதி தில்லியில் நடைபெற உள்ளது. மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்க அனைத்து எம்பி.க்களும் தில்லி வரும்போது இக்கூட்டத்தை நடத்த முடிவுசெய்யப்பட்டதாக வி.எச்.பி தலைவர் பிரவீன்தொகாடியா தெரிவித்தார்.
இந்தவிஷயத்தில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சமாதானப்படுத்தி, தங்களதுகோரிக்கையை சம்மதிக்கச் செய்ய திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.
அயோத்தியில் ராமர் ஆலயம்கட்டுவது தொடர்பான சட்டத்தை இயற்றுவது நாடாளுமன்றத்தின் கையில்தான் உள்ளது. இதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டியது அரசுதான் என அவர் குறிப்பிட்டார்.
ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் (ஆர்எஸ்எஸ்) அமைப்பின் சிந்தனை கூட்டத்தில் அவர் இந்த தகவலைத் தெரிவித்தார். இதுதொடர்பாக அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல்செய்துள்ளது. அதில் தொல்லியல்துறை அகழாய்வு நடத்தி அப்பகுதியில் ராமர் ஆலயம் இருந்ததற்கான சான்றுகள் இருந்தால் அந்தநிலம் ஹிந்துக்கள் வசம் அளிக்கப்படும். என்று குறிப்பிடப்பட்டிருந்ததை அவர் சுட்டிக் காட்டினார்.
ராமர் ஆலயம்கட்டுவோம் என்று குஜராத்மாநில முன்னாள் அமைச்சர் அமித்ஷா குறிப்பிட்டது குறித்து கேட்டதற்கு, ஹிந்துமதத்தின் மீது தீவிர பற்றாளரான அமித்ஷா, அங்கு ஆலயம் கட்டவேண்டும் என்பதையே அவ்விதம் குறிப்பிட்டுள்ளார் என தொகாடியா குறிப்பிட்டார்.
ஹிந்துத்துவ கொள்கைகளுக்கு ஆதரவாகசெயல்படும் அரசியல் கட்சிகள், பசுவதையை எதிர்க்கும்கட்சிகள் மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்க முனையும் கட்சிகளை தங்கள் அமைப்பு ஆதரிக்கும் என்றார்.
கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ... |
நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ... |
இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.