ஆந்திரமாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள லால்பகதூர் ஸ்டேடியத்தில், அடுத்தமாதம் 11-ந் தேதி குஜராத் மாநில முதல்வர் நரேந்திரமோடி பங்கேற்கும் ‘யுவ சம்மேளன்’ என்ற கூட்டத்தை நடத்த ஆந்திர பா.ஜ.க திட்டமிட்டுள்ளது.
அங்கு மோடி உரையை கேட்க நுழைவுக்கட்டணமாக ரூ.5 வசூலிக்கப்படும் என ஆந்திர பா.ஜ.க அறிவித்தது. இதை காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் அரசியல் ஆக்கியதை தொடர்ந்து சர்ச்சையை தவிர்க்க ஆந்திர பா.ஜ.க தனது முடிவை மாற்றிக்கொண்டுள்ளது.
அந்த கூட்டத்தில் மக்கள் இலவசமாக பங்கேற்கலாம் என்றும், நுழைவுகட்டணம் செலுத்துவது கட்டாயமல்ல என்றும் மாநில பா.ஜ.க தலைவர் கிஷன்ரெட்டி தெரிவித்தார்.
இருப்பினும், உத்தரகாண்ட் வெள்ளபேரழிவு நிவாரண பணிகளுக்கு நன்கொடை செலுத்த விரும்புவோர், நுழைவு கட்டணமாக ரூ.5-க்கு மேல் செலுத்தலாம் என அவர் கூறினார்.
தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ... |
உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ... |
Leave a Reply
You must be logged in to post a comment.