சிஎன்என்.ஐ.பி.என் தொலைக் காட்சியும் தி ஹிந்துவும் இணைந்துநடத்திய லோக்சபா தேர்தல்தொடர்பான கருத்துக்கணிப்பில் பீகார் மாநிலத்தில் பாஜக.,வின் வாக்கு வங்கி 14 சதவிதத்தில் இருந்து 22 சதவிதமாக உயர்ந்துள்ளது.
மேலும் லாலுபிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளத்துக்கு கடந்த தேர்தலை விட கூடுதல் இடங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்க பட்டுள்ளது. பீகாரில் 40 தொகுதிகள் உள்ளன. கடந்த 2009ஆம் ஆண்டு லோக்சபாதேர்தலில் ஐ.ஜ. தளம் 20, பாஜக 12, ராஷ்டிரிய ஜனதா தளம் 4, காங்கிரஸ் 2 தொகுதிகளைக் கைப்பற்றியிருந்தது.
ஆனால் வாக்குசதவீதத்தின் அடிப்படையில் ஐக்கிய ஜனதா தளத்துக்கு 24%, ராஷ்டிரியஜனதா தளத்துக்கு 19%, பா.ஜ.க.,வுக்கு 14%, காங்கிரஸூக்கு 10% என இருந்தது. தற்போது லோக்சபாதேர்தல் நடைபெற்றால் ஐக்கிய ஜனதாதளம் 15-19 தொகுதிகளையும் ராஷ்டிரிய ஜனதா தளம் 8 முதல் 12 இடங்களையும் பா.ஜ.க 8-12, காங்கிரஸ் 4 இடங்களையும் கைப்பற்றும் என்கிறது கருத்துக்கணிப்பு. வாக்குசதவீதத்தின் அடிப்படையில் ஐக்கிய ஜனதா தளத்துக்கு 25%, ராஷ்டிரிய ஜனதாதளத்துக்கு 24%, பா.ஜ.க.,வுக்கு 22%, காங்கிரஸுக்கு 10% என்று கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ... |
நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ... |
பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.